Monday, 20 January 2014

கொள்கைக்காக விவாதம் விரோதம் !


ஒருவர் நம்மிடம் விவாதம் செய்யவில்லை அதனால் நாம் சொல்வது சரிதான் என்று நினைப்பது சரியாக இருக்க முடியாது.

ஒருவர் நாம் சொல்வதை கேட்டுக் கொண்டிருப்பதால் நாம் சொல்வதை அவர் விரும்பிக் கேட்கிறார் என்றும் ஆகி விடாது.

நான் முறையற்ற முறையில் பேச அவர் பொறுமை கையாள்கிறார் என்பதால் அவர் கோழையல்ல


எல்லாருக்கும் ஒரு கருத்து உள்ளது. நாம் அதை மதிக்க வேண்டும்.அவர் கருத்து நம் கருத்துக்கு உடன்டாதவையாக இருக்கலாம்.
எண்ணங்கள் வேறுபடும் .
விவாதங்கள் விரோதங்களாக மாறக் கூடாது .
விவாதத்தின் வழியே யாரையும் மாற்றி விட முடியாது, அன்பால் சாதிக்க முடியும்

தகப்பன் ஒரு கொள்கை
மகன் ஒரு கொள்கை
மனைவி கொள்கையற்ற அமைதி
மகனும்,மனைவியும் நாம் சொல்வதை கேட்கலாம் .ஆனால் அதில் உடன்பாடு அவர்கள் மனதில் உண்டா!

No comments:

Post a Comment