Sunday 5 January 2014

உருவாகும் என்ணங்கள் உயர்வாய் இருக்கட்டும்

பிராண வாயு கெட்ட குருதியும்
இனிய இதய தோட்டத்தில் வந்தமையால்
இனிய இதய வழி நரம்புகளில் சுத்த குருதிகளாக மாற்றப் பட்டு
உடலை நலமாக்க வழி வகுக்கின்றது

நரம்பெனும் வேர் வழியே வந்த நல்ல குருதி
மூளையை நன்முறையில் இயங்கச் செய்து
மலர்கள் போன்ற உயர்ந்த சிந்தனையை தருகின்றது

உடலெனும் விதையை பாதுகாக்க உறுதியான இதயம் வேண்டும்
உயர்வான மூளை சிறப்படைய உயர்ந்த சிந்தனைகள் உருவாக வேண்டும்
சிந்தனைகள் சீர் கெட விழுதும்(இதயமும்), வேரும்(நரம்பும் ) கெட்டொழியும்

தோப்பில் பாய்ச்சிய கெட்ட நீர் தேங்கி நின்றதால்
தோப்பே அழியும் நிலை உருவாகும்


அனைத்தும் பாதுக்காக்கப் பட
உருவாகும் என்ணங்கள் உயர்வாய் இருக்கட்டும்
உயர்வாய் உள்ளவை உலகளவில் பரவட்டும்
உயர்வான நன்மைகள் நம்மை வந்தடையட்டும்

No comments:

Post a Comment