Sunday 5 January 2014

தேர்தல் காலத்திலும் நிகழலாம்


தவறு செய்தவன்
தவறை விரும்பியே செய்தவன்
தவறை மறைக்க விரும்புகிறான்
தவறை மறைத்தமையால்
தன்னை மக்கள் மறப்பார்கள்
தன்னை உயர்படுத்த விரும்புகிறான்
தகுந்த நேரம் பார்க்கிறான்
தவறு செய்தமைக்கு வருத்தம் தெரிவிக்க
தவறு மக்களை துன்புறுத்தியதால் வந்தவை
தவறை மக்கள் மன்னிக்காமல்
தவறை இறைவன் மன்னிக்க மாட்டான்
தவறு செய்தவனின் வருத்தம் மனதிலிருந்து வந்ததல்ல
தவறு செய்தவனின் வருத்தம் ஆதாயம் தேடி வந்தது
தவறு செய்தவனின் வருத்தம் அடுத்த தவறை நாடி நிற்கின்றது

No comments:

Post a Comment