Monday 13 January 2014

மன நிறைவு நிறைவான வாழ்வைத் தரும்

நமக்குள் ஆயிரம் பிரச்சனை
நமக்குள் இருக்கும் பிரச்சனை விலக வேண்டும்

நம் பிரச்சனை விலக விளக்கம் தேவை
நம் பிரச்சனை விலக முயற்சி தேவை

ஒரே உருவம் படைத்தோர் அறிது
ஒரே கருத்தும் கொண்டோர் குறைவு

இருண்ட அறையில் அழுக்கு
அழுக்கை அறிய ஒளி தேவை
ஒளி கிடைத்த பின் அழுக்கை அகற்ற தொடப்பம் தேவை
அனைத்தும் கிடைத்த பின் நம் உழைப்பு தேவை

மனதில் உள்ள அழுக்கு மறைய மார்க்கம் தேவை
மார்க்கம் அறிந்த பின் செயல்பாடு தேவை

அகற்றிய அழுக்கும் அடுத்த நாளும் சேரும்
திருந்திய மனதிலும் கெட்டது வரும்
கெட்டது வராமல் இருக்க தொடர் முயற்சி தேவை

ஐந்து முறை தொழுகைக்கும் சுத்தம் (ஒலு)
ஐந்து முறை தொழுகை தினமும்
இடைப்பட்ட நேரத்தில் வந்த மனக் கெடல்
அடுத்த தொழுகையை தொடர மனஒழுக்கத்தின் உயர்வு

தர்மம் நம் வீட்டிலிருந்து ஆரம்பிக்கப் பட வேண்டும்
செயலும் நம்மிடமிருந்து தொடங்கப் பட வேண்டும்

என் மகன் உன் மகனால் கெட்டான்
என அடுத்தவர் மீது பழி சுமத்தல் எளிது

என் செயல்பாடு என் மகனை உருவாக்கியது
என் வழிகாட்டல் என் மகனை உயர்வாக்கியது
என் மகனால் மற்றவர் பயன்பெற்றனர்
என்ற மன நிறைவு நிறைவான வாழ்வைத் தரும்

1 comment:

  1. மன நிறைவான வரிகள் மனதை மகிழ்வித்தன... பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete