Monday 27 January 2014

நான் என்ன செய்வேன்!

நான் பெற்ற குணம் தனித்தன்மை பெற்றது
நான் பெற்ற அறிவு மற்றவர்களோடு மாற்றமாக உள்ளது

அவர்களை ஒரு கோணத்தில் பார்த்தால்
அவர்கள் சொல்வது சரியாக தெரிகிறது

அவர்களை மற்றொரு கோணத்தில் பார்த்தால்
அவர்கள் சொல்வது சரியாக தெரியவில்லை

அவர்களின் செயல்பாடுகள் எனக்கு நிறைவாக தெரியவில்லை
அவர்கள் என்னை அறியாதவர்களாய் இருந்து
அவர்கள் என்னை அறியாதவன் என்கிறார்கள்

அவர்களிடமிருந்து நான் பாடம் கற்கவில்லை
அவர்கள் சொல்லித் தரும் பாடங்கள் மாறுபட்டிருக்க
அவர்களிடம் நான் ஏன் பாடம் கற்க வேண்டும் ?
அவர்கள் பாடம் கற்று வரட்டும்
அவர்களிடம் பாடம் கற்பதைப் பற்றி யோசிக்கிறேன்

நான் பெற்ற அனுபவ பாடம்
எனக்கு போதுமானதாக இருக்கிறது

சொல்வது எளிது
செயல்படுத்துவது கடினம்

1 comment:

  1. அனுபவ பாடமே என்றும் பயன் தரும்... அனைத்தையும் தரும்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete