Monday 23 September 2013

ஊரெல்லாம் ஓடி தேடியது கிடைக்காதவை ஓர் இடத்தில் கிடைத்தது





மென்மையான கையில் பதுமையாக நீ இருந்தாய்
சுமையாக கைக்கு தெரியவில்லை

பாடப் புத்தகமே பலமுறை உன்னை படித்தேன் தேர்வில் தேர
படித்தது தேர்வு வரை நினைவில் நின்றது

கேட்ட கேள்விக்கு சரியான பதில் தந்து தேர்வில் வெற்றி பெற்றேன்
தேர்வில் பெற்ற வெற்றி வாழ்கைக்கு உதவவில்லை

படித்ததும் நினைவில் நின்றதும் தேர்வு முடிந்ததும் மறந்து போயின
புத்தகமாக கையில் நிறுத்தி உன்னை படிக்க தூக்கம் தழுவ தூங்கவில்லை

வாழ்க்கைப் புத்தகத்தில் பெற்ற கல்வி அதிகம்
வாழக்கையின் அனுபவக் கல்வி வாழ்வை உயரச் செய்தது

தேடியது கிடைத்தது கூகிலில்
தேடாததும் கிடைத்தது ஃபேஸ்புக்கில்

மற்றவர் அனுபவம் என்னை தவறவிடாமல் தடுத்தது,
சொன்னது, செய்தது கூகில்.
கேட்காதவையெல்லாம் ஃபேஸ்புக்கில் கொட்டியவர்கள் கற்கச் செய்து விட்டனர்

ஊரெல்லாம் ஓடி தேடியது கிடைக்காதவை ஓர் இடத்தில் கிடைத்தது
நான்கு சுவருக்குள் இருந்து கணினி வழியே வாழ்க்கையை அறிய முடிந்த்து

2 comments:

  1. "வாழ்க்கைப் புத்தகத்தில் பெற்ற கல்வி அதிகம்
    வாழக்கையின் அனுபவக் கல்வி வாழ்வை உயரச் செய்தது" உண்மைதான் அனுபவமே நல்ல ஆசான்

    ReplyDelete
  2. நல்லது... வாழ்த்துக்கள்...

    ReplyDelete