Tuesday 10 September 2013

வாழ்க்கைக் கல்வி அறியாத பேதை


காமப் பசி காலம் பொறுக்கவில்லை
கடிமணம் காமப் பசியை அடக்கியது
காலம் கடந்தது மனம் கொண்டவள் விலகி நின்றாள்
காமப்பசி பாலைவன காற்றுபோல் சூடாய் வீசியது

கடிமணம் கொண்டவள் காதல் வசப்பட்டிருந்தால்
காமம் கரைந்து காதல் மிகுந்திருக்கும்
வந்தவள் கொண்டவனை காதலில் மிகைக்கவில்லை
கடிமணமும் கடும்மனமாக மிகைத்துப் போனது

கற்றவள் பெற்ற கல்வி வாழ்கைக் கல்வியல்ல
கற்றவள் கற்றது தேர்வில் முதல மதிப்பெண் பெறவே
கற்றவளின் கல்வி ஏட்டுக் கல்வியானது
கற்று இணைந்தவள் இணைந்தவனின் மனம் அறியவில்லை

No comments:

Post a Comment