Wednesday 25 September 2013

எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க...

எல்லோரும் மகிழ்சியாக இருக்க வேண்டும்
எல்லோரையும் மகிழ்சியாக இருக்க வைக்க வேண்டும்

நான் எல்லோரையும் மகிழ்ச்சியாக இருக்க வைக்க
நான் மகிச்சியாக இருக்க வேண்டும்.

நான் மகிழ்ச்சியாக இருக்க இறைபக்தி எனக்கு வேண்டும்
நான் இறைபக்தி பெற்றிருந்தால் துயரம் என்னை நெருங்காது

துயரமும் ,துன்பமும் ,பெருமையும் இல்லா மனதில் சேவை மனது நிற்கும்
துயரம் கொண்ட மனத்தைக் கொண்ட மனிதரைக் கண்டால் அவர் மனதை வருட சேவை செய்யும் மனது நாடி நிற்கும்

சேவை செய்யும் மனதில் நிறைவும் மகிழ்வும் நிறைந்து இருக்கும்
சேவை செய்யும் மனிதரைக் காண மகிழ்வும் விரைந்து வரும்

பொருளாதார நிறைவு வசதிகளை வாரிக் கொடுக்கும்
பொருளாதார நிறைவு வாய்ப்புகளை தந்து உதவும்

பொருளாதார நிறைவு வாய்ப்புகளை ,வசதிகளை தந்தாலும் மகிழ்வைத் தரும் இயந்திரமல்ல
போதும் என்ற மனமும் நிறைவு பெரும் மனமும் மகிழ்வைத் தரும்
மகிழ்வு பெற்ற மனம் மற்றவரை மகிழ்வு படுத்தும்

இதயத்தில் இறை பக்தி நிறைந்திருக்க மற்றவருக்கு இன்னல் தரும் எண்ணம் வராது
இறைபக்தியே பாவமான செயல்களை தடுத்து நிறுத்தி நன்மை நாடி நிற்கும்

நன்மையை நாடுவோர் பொல்லாங்கு செய்ய மாட்டார்
நன்மை உயர்ந்து நிற்க மக்கள் மனதில் மகிழ்வு பொங்கி நிற்கும்

1 comment:

  1. /// போதும் என்ற மனமும் நிறைவு பெரும் மனமும் மகிழ்வைத் தரும்... மகிழ்வு பெற்ற மனம் மற்றவரை மகிழ்வு படுத்தும்... ///

    உண்மை... உண்மை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete