Monday 23 September 2013

உயர்வும் தாழ்வும் உழைப்பின் முறையில்

உயர்வு மற்றவர்களால் உயர்த்தப் படுவது
திறமை தனக்குள் முடங்கிக் கிடக்க
மற்றவர் முன்னிறுத்திய திறமை தானே உயரும்
சேர்த்துக்  கொண்டால் மற்றவர் தூக்கி விடுவர்

சிறுபான்மையர் சிதைக்கப் பட
பெரும்பான்மையர் புகழப்படுவர்
ஆளை வைத்து மதிப்பு உயரும்
இடத்தை வைத்து விலை உயரும்

சரக்கு உயர்வாய் இருக்க
விற்பவன் திறமை அற்றிருக்க
சரக்கு தேங்கி நிற்கும்
விற்பவர் திறமையால் மதிப்பற்ற சரக்கும் விற்று போகும்

உள்ளநாட்டு சரக்கு மதிப்பற்று நிற்கும்
வெளிநாட்டு சரக்கு மதிப்பெற்று நிற்கும்
விளம்பரம் வியாபரத்தினைப் பெருக்கும்
தட்டுப்பாடு விலையை உயர்த்தி நிறுத்தும் 

1 comment:

  1. "விற்பவர் திறமையால் மதிப்பற்ற சரக்கும் விற்று போகும் " நாட்டில் இன்று இதுதானே நடக்கிறது.

    ReplyDelete