Wednesday 18 September 2013

விரும்பியதை காதல் கொண்டதை நான் உருவாக்க முடியாமல் உருகுகின்றேன்

   
வார்த்தைகளை விரும்புகிறேன்
    கவிதைகளை காதல் கொள்கிறேன்

    விரும்பியதை காதல் கொண்டதை மனதில் மனனம் செய்கிறேன்
    விரும்பியதை காதல் கொண்டதை நான் உருவாக்க முடியாமல்   உருகுகின்றேன்

    வார்த்தைகள் அறிவேன்
    கவிதைகள் யாக்க அறியேன்

    சிலரால் செயற்கறிய செயல்கள் செய்ய முடிகின்றது
    சிலரால் செயற்கறிய செயல்கள் செய்ததாய் மார்தட்டிக் கொள்ள     முடிகின்றது

    சிந்தனையும் செயல்பாடும் உருவாக உழைக்க வேண்டும்
    சிந்தனையும் செயல்பாடும் இருந்தாலும் உருவாக்க இறைவன் அருளும் வேண்டும்

    பேச முடிந்தவனுக்கு எழுத முடிவதில்லை
    எழுத முடிந்தவனுக்கு உருவாக்கத் தெரியவில்லை

    எந்த வடிவிலும் என்னால் உருவாக்கிக் கொள்ள முடியவில்லை
    எந்த முயற்சியும் எடுக்காமல் என்னை நானே எவ்வாறு உருவாக்கிக் கொள்ள முடியும்!

    காலத்தே பயிர் செய்வதை தவிர்த்து வந்தேன்
    காலம் கடந்த பின் வருந்தி நிற்கிறேன்.

                                               முகம்மது அலி ஜின்னா 

No comments:

Post a Comment