Friday 20 September 2013

மனதில் உட்புகுந்து ஆத்மாவை தொட்ட நாட்கள்

மனதில் விரிசல்
உள்ளத்தில் நடுக்கம்
நினைப்பில் தடுமாற்றம்
புரிதலற்ற போக்கு
அறிதளற்ற நிலை
சிக்கலில் சிக்கும் குழப்பம்
வடிகால் அற்ற தேக்கம்
தவறான பாதையில் தவறிப் போதல்
அனாதையாய் விடுபட்ட நிலை  
வார்த்தைகள் மற்றும் நம்பிக்கை துரோகம்,
நொறுங்கிய  மனமாய்   மாய்த்துக் கொள்ளும் நிலை
பாராமுகமாய் படைத்தவனை அறியாமல் இருந்த நிலை

கடலில் சிப்பிக்குள் இருக்கும்  முத்து மறைந்திருக்க
உலகில் உயர்ந்திருக்கும் இருக்கும் இறையோனும் மறைந்திருக்க
கடலில் மூழ்கி முத்தெடுத்து சேர்ப்பதுபோல்
இறைமறை கற்று அதில் மூழ்கி உயர்வை பெற வழி கண்டேன்
இறையை நாடும் மனம் இயல்பானது

வாழும் வாழ்க்கை உயர்வானது
செய்யும் செயல் சிறப்பானது

பிரார்த்தனை மற்றும் உபதேசம் பெற்ற நாட்கள்
மனதில் மகிழ்ச்சிகரமான நாட்கள்
மனதில் உட்புகுந்து ஆத்மாவை தொட்ட நாட்கள்
புனித சடங்கில் ஈடுபட்டு இணைந்த நாட்கள்     
உண்மையான ஒரு வித்தியாசமான உயர்ந்த நாட்கள்

ஆற்றும் ஒருவர் செயல்
ஆன்மா அதன் தூய்மை
ஆளுமை அதன் ஆக்கம்  
ஆண்டவனிடம் அதன் அடக்கம்

மண்டியிடுதல் மறையை தந்த மான்புடையோனுக்கே
மண்டியிட்டு வேண்டல் மறையை தந்த ஒருவனுக்கே

அறிதலில் எளிமை
புரிதலில் உயர்வு
புகழ் பாடுதலில் புண்ணியம்
புவியாளும் இறையோனுக்கே

ஆனந்தமாய் நிறைந்த மனம் அல்லாஹ்வை போற்றி நின்றது
அடுத்து நின்ற நபிமார்கள் வழிகாட்டல் சிறப்பானது
வகை வகையாய் வாழ்வின் சிறப்பு உயர்வானது
நிறை நிறையாய் நிறைவாக நித்தம் இறையோனை தொழுது நின்றேன்
ஆனந்தம் பேரானந்தமாய் பொங்கி நிறைவானது
அனைத்தும் புகழும் அல்லாஹ்வுக்கே (இறையோனுக்கே) சொந்தமானது


1 comment:

  1. /// இறையை நாடும் மனம் இயல்பானது... ///

    சிறப்பான வரிகள் பல...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete