Monday 23 September 2013

உண்மை அறிய நாடுங்கள். மக்களை பிரிவு படுத்தாதீர்கள்



அனைத்தையும் அறிவேன்! அடுத்தவனை அறியேன்!

கல்யாணராமன் வேலைத் தேடி ஒரு அலுவலகத்திற்கு போகிறார். அங்கு பேட்டி காண்பவர்கள் கேள்விக்கு மேல் கேள்வி கேட்கின்றனர். அங்கே கேட்ட கேள்வியும் கல்யாணராமன் சொன்ன பதிலும் மற்றும் அவருக்கு வேலைத் தருவதற்கு இறுதியாக கொடுத்த விவரமும் அறிய தொடர்ந்து படியுங்கள்!

உன் பெயர் ?
கல்யாணராமன்
உன் தந்தையின் பெயர்?
கல்யாணம்.
உன் தாயின் பெயர்?
சீதா தேவி.
உன் பெயரில் உன் தந்தை பெயர் சேர்ந்துள்ளதே!
அது நாங்கள் தொடர்ந்து செய்வது.
ஏன் உங்கள் தாயின் பெயரை சேர்ப்பதில்லையா!
பழக்கமில்லை .பெண்ணாயிருந்தால் கணவன் பெயரில் சேர்த்துக் கொள்வார்கள்.
ஓகோ! பெண்ணாயிருந்தால் பெயரில் கூட தனித்து நிற்க முடியாதோ!
அப்படியில்லை. இது தொடர்ந்து வரும் பழக்கம்.
நீ என்ன படித்திருக்கிறாய்? முன் வேலைப் பார்த்த அனுபவம் உண்டா ?
நான் கணினி பொறியாளர் படிப்பு படித்துள்ளேன். மதிப்பெண்களும் அதிகம் வாங்கி உள்ளேன் அனால் வேலைப் பார்த்த அனுபவமில்லை,

மற்ற அனுபவங்கள் மற்றும் பொது அறிவைப் பற்றி பேட்டி தொடர்கிறது..
செய்தித்தாள்கள் மற்றும் இதழ்கள் படிப்பதுண்டா?
ஆங்கிலத்தில் ஹிந்து பத்திரிகையும் தமிழில் தினமணியும் தொடர்ந்து படிப்பேன். மற்றும் ஆனந்த விகடன்,துக்ளக் பத்திரிக்கை படிப்பேன்
வேற்று மொழிகள் தெரிந்தவை ?
ஆங்கிலம்
வேறு பொது அறிவு ? அரசியல், சரித்திரம் இதனை அறிவாயா?
சரித்திரம் வரலாறுகள் அதிகமாக தெரியும் மற்றும் அயோத்தி வரலாறும் தெரியும்.
தொலைக் காட்சி மற்றும் நாடகம் பார்பதுண்டா?
ஜெயா தொலைக் காட்சி மற்றும் டிஸ்கவரி சேனல் பார்ப்பேன்
நாடகம் சேக்ஸ்பியர், துக்ளக் நாடகம் பார்த்துள்ளேன் .
உங்கள் ஊர் ஏது?
மெட்ராஸ்
உங்கள் வீடு ?
தியாகராஜநகர்
உங்கள் பக்கத்து வீடு ?
யாரோ ஒரு ‘பாய்’ குடி இருக்கிறார்
‘பாய்’ என்றால் ?
துலுக்கர்
துலுக்கர் என்றால் ?
முஸ்லிமுக்கு அப்படி சொல்வார்கள். .
முஸ்லிம் என்று முதலிலேயே சொன்னால் என்ன?
பழக்கமாய் சொல்வது அப்படி! அது வந்து விட்டது
அவர்கள் எந்த மொழி பேசுகிறார்கள் மற்றும் அவர்களைப் பற்றி சிறிது சொல்!
அவங்களைப் பற்றி எனக்குஓன்றும் தெரியாது
உலக சரித்திரம் தெரியும் ,சினிமா பார்ப்பாய் இது தெரியாதா?
சினிமாவில் மற்றும் செய்திகளில் அவர்களை தீவிரவாதியாகக் காட்டுகிறார்கள் அதனால் அவர்களிடம் பழகவே பயமா இருக்கு!
‘இப்பொழுது உன்னை வேலையில் சேர்ப்பதே எங்களுக்கு பயமா இருக்கு. எங்கள் தொழில் முன்னேற பலரையும் பார்த்து பேசி பழகி ஆக வேண்டியது தேவை. உனக்கு அடுத்த வீட்டுக்காரரிடம் பழக பயம் மற்றும் அவர்களைப் பற்றி அறிய நாட்டமில்லை. ஒரு தெரு மக்களைப்பற்றியே உனக்கு போதிய அறிவில்லை . முதலில் உடன் வாழும் மக்களை அறிந்து வா!’ என அனுப்பி வைக்கின்றனர்.

 உடன் வாழும் மக்களின் உண்மை நிலை அறியோம!
உலக சரித்திரம் படிப்போம் ,சங்க இலக்கியம் படிப்போம் ஆனால் உடன் வாழும் மக்களின் உண்மை நிலை அறியோம்.

முஸ்லிம் என்றால் உருது பேசுவோர் அல்லது அரபி பேசுவோர் மற்றும் அதுதான் அவர்கள் தாய்மொழி என்று நினைக்கும் மானிடரே சிறிது சிந்தியுங்கள்.குர்ஆன் அரபி மொழியில் உள்ளது . ஆனால் உலகில் உள்ள முஸ்லிம்களுக்கு அரபி தெரியும் என்ற முடிவுக்கு வரவேண்டாம் . உருது மொழி மற்ற மொழி மாதிரி அதுவம் ஒரு மொழி.”பாய்” என்றால் உருது மொழியில் சகோதரர் என்ற பொருள் சொல்வர். உருது மொழி பேசுவோர் அனைவரும் முஸ்லிம்கள் அல்ல.ஹிந்து சகோதரர்களுக்கும் அது தாய் மொழியாகவும் உள்ளது.
இஸலாம் உலகில் இரண்டாவது மார்க்கமாக உள்ளது. எந்த நாட்டில் ஒருவன் பிறந்து வளர்ந்தானோ அதுவே அவனுக்கு அது தாய் மொழியாக உள்ளது ,அதுபோல் தமிநாட்டில் பிறந்து வளர்ந்தவன் முஸ்லிமாக இருப்பினும் அவனுக்கு தமிழ்தான் தாய் மொழி .

 முஸ்லிம் என்றால் மாமிசம் மட்டும்தான் சாப்பிடுவான் இப்படி சிலர் நினைக்கின்றனர் .அதுபோல் தீவிரவாதி என்றால் முஸ்லிம்தான் என்று கதை கட்டுகின்றனர் .ஒற்றுமை வேண்டா மக்கள் இதனை மிகைப் படுத்துகின்றனர்.முதலில் நல்ல நோக்கோடு உடன் வாழ்வோரின் உள்ளம் அறிந்து வாழுங்கள் இந்து மத மக்கள் அனைவரும் தமிழரல்ல அதையும் நீங்கள் தெரிந்திருக்கலாம் . அனைவரும் ஒற்றுமையாக ஒருவரை அறிந்து சிறப்பாக வாழ்வோம்.மார்க்கம் (மதம்) வேறு மொழி வேறு. தீவிரவாதி உலகில் பல இடங்களில் ஒளிந்து வாழ்கிறான். மனிதனுக்கு மனிதன் குணத்திலும் மாறுபடுவான். ஒருவன் செய்த குற்றம் அனைவருக்கும் தண்டனை வாங்கித் தராது . முஸ்லிமை முஸ்லிம் கொன்றால் அவன் கொலையாளி ஒரு முஸ்லிம் மற்றவனக் கொன்றால் அவன் தீவிரவாதி .காஸ்மீரில் முஸ்லிம்கள் கொல்லப்படுவது தீவிரவாதிகளால்தான் .ஆனால் அதற்கு பெயர் மட்டும் முஸ்லிம் தீவிரவாதியா? உலகம் முழுவதும் நிரம்பி வழிவது இஸ்லாமிய தீவிரவாதமா? அவ்விதமென்றால் மக்கள் ஏன் உலகில் மிகவும் இஸ்லாம் மார்க்கத்தில் வந்து இணைகிறார்கள். அறிவுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். உண்மை அறிய நாடுங்கள். மக்களை பிரிவு படுத்தாதீர்கள் .

 முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவருக்கொருவர் கருணைபுரிவதிலும், அன்பு செலுத்துவதிலும், இரக்கம் காட்டுவதிலும் (உண்மையான) இறைநம்பிக்கையாளர்களை ஓர் உடலைப் போன்று நீ காண்பாய். (உடலின்) ஓர் உறுப்பு சுகவீனமடைந்தால் அதனுடன் மற்ற உறுப்புகளும் (சேர்ந்து கொண்டு) உறங்காமல் விழித்துக் கொண்டிருக்கின்றன. அத்துடன் (உடல் முழுதும்) காய்ச்சலும் கண்டுவிடுகிறது.

அறிவிப்பாளர்: நுஅமான் இப்னு பஷீர்(ரலி) நூல்: புகாரி 6011

“எவனொருவன் மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்;. மேலும், எவரொருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்” 5:32


1 comment:

  1. 'உடன் வாழும் மக்களின் உண்மை நிலை அறியோம்'.
    என்று ஒதுங்கி இருக்காமல் அனைவருடனும் பழகுவோம்.

    ReplyDelete