Monday 2 September 2013

உயர்வுக்கும் தாழ்வுக்கும் மனமே காரணமானது

உன்னை  உறுதியாய் நம்பினேன்
என்னை நான் நம்பவில்லை

உன் தத்துவம் உயர்வாய் தெரிந்தது
என் கொள்கை தாழ்வாய் போனது

உன் கவனம் உன்  வெற்றி மீது
என் கவனம் என் தோல்வியின்  மீது

உன் வெற்றி உன்னை உயர்த்தி வைத்தது
என் தோல்வி என்னை தலை குனியச் செய்தது

நீ உன்னைப் பற்றி சிந்தித்தாய்
நான் உன்னைப் பற்றியே சிந்தித்தேன்

உன் சிந்தனை உனக்கு உந்துதல் சக்தியைத் தந்தது
என் சிந்தனை எனக்கு உந்துதல் சக்தியைத் தர மறுத்தது

உன் மனது அடுத்த அடி நகர்த்த சிந்தித்தது
என் மனது அடுத்த அடி நகர மறுத்தது

உன் மனது  வெற்றி உறுதி என நம்பியது
என் மனது தோல்வியை நினைத்து அசைபோட்டது

உனக்குள் உள்ள உயர்வு மனப்பான்மை உன்னை உயர்த்தியது
எனக்குள் உள்ள தாவு மனப்பான்மை என்னை தாழ்த்தியது

உயர்வுக்கும் தாழ்வுக்கும் மனமே காரணமானது
உள்ளதை உயர்வுள்ளல் உயர்வானது


No comments:

Post a Comment