Sunday 15 September 2013

எனக்குள் இருக்கும் சிக்கலை என்னால் அவிழ்க்க முடியவில்லை!


புகழ் பாடும் மக்களை பார்த்து விட்டேன்
குழி தோண்டி புதைக்கும் மக்களை பார்த்து விட்டேன்

பெருமை பேசி அலைந்து அழியும் மக்களை பார்த்து விட்டேன்
குற்றம் காணும் மக்களை பார்த்து விட்டேன்

குறை கூறி கண்டிக்கும் மக்களை கண்டு கொண்டேன்
மக்கள் மக்களை அழிக்கும் கொடுமையை கண்டு கொண்டேன்

எனக்குள் இருக்கும் சிக்கலை என்னால் அவிழ்க்க முடியவில்லை
எனக்குள் இருக்கும் சிந்தனையை என்னால் இயக்க முடியவில்லை

என் பிழைகளை அறியாமல் தடுமாறுகின்றேன்
என் பிள்ளைகள் அறியாமல் செய்த பிழைகளை தண்டிக்கின்றேன்

உன் வழிகாட்டுதலை ஓரம் கட்டுகின்றேன்
உன் தண்டனையை அறியாமல் தவறு செய்கின்றேன்

உயர்வானதாய் ஓரம்கட்டி ஒன்றும் இல்லா பண்டத்திற்கு ஓசை எழுப்புகின்றேன்
உயர்வான ஓரிறைவன் அருளை நான் அறிய முடியவில்லை

உயர்வான உன்னருள் நாடி நிற்கின்றேன்
உனைவிடுத்து எவரிடம் நான் நாடி நிற்க முடியும்

கடிமனம் கொண்ட கண்டவரிடம் கேட்டு கேள்விக் குறியானேன்
கட்டிவைத்த மேடைகள் கேட்கும் நிலைக்கு மாற்றி மனம் மாற்றுகின்றார்

வேதம் ஓதி கற்பித்ததை களங்கம் வரச் செய்ய மனமில்லை
வேதம் தந்த உன்னையே நாடி நிற்பேன் நீ கொடுத்த வாழ்வு வரை


3 comments:

  1. அருமையாக முடித்தும் உள்ளீர்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. // வேதம் ஓதி கற்பித்ததை களங்கம் வரச் செய்ய மனமில்லை
    வேதம் தந்த உன்னையே நாடி நிற்பேன் நீ கொடுத்த வாழ்வு வரை //

    அழகிய வரிகள் !

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. // வேதம் ஓதி கற்பித்ததை களங்கம் வரச் செய்ய மனமில்லை
    வேதம் தந்த உன்னையே நாடி நிற்பேன் நீ கொடுத்த வாழ்வு வரை //

    அழகிய வரிகள் !

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete