Saturday, 1 February 2014

பன்முகத்தன்மை மனித உரிமையை வளர்க்கும்.

கண்களுக்கு ஒளி
சுவாசப்பைக்கு காற்று
இதயத்துக்கு அன்பு
மனித நேயத்துக்கு உரிமை
பிறர் உரிமையைப் பறிப்பது குற்றம்
நமது உரிமை பறிபோவதை
நம்மால் பார்த்துக் கொண்டு இருப்பதும் குற்றம்.
"Your Liberty ends, where my nose begins"
ஒரு குச்சியைக் கொண்டு சுழற்றும் உரிமை உனக்கு உண்டு.
அது என் மூக்கின் மேல் பட்டு விடக்கூடாது.

ஒரு சமுதாயத்தின் வலிமை உடையவர்களிடமிருந்து தயக்கமின்றி உரிமை கிடைக்க வேண்டும் என்பதனால்தான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே சபைகளிலோ அல்லது கடைத்தெருவிலோ உங்களில் எவரும் தம்கையில் ஈட்டியுடன் நடந்து சென்றால் அதன் நுனி மற்றவரின் மீது குத்திவிடாமல் இருக்கும் பொருட்டு அதனை கையில் பிடித்துக் கொள்ளவும் என்று சொன்னார்கள். இந்த நபி மொழியை அபூமூஸா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஒரே சமூகம், ஒரே மொழி, ஒரே மதம், ஒரே இனம், ஒரே கலாச்சாரம் போன்ற ஒற்றைச் சிந்தனை மனித உரிமைக்கு எதிரானது. ஒற்றைத் தன்மை மனித உரிமையை சிதைக்கும் வேற்றுமையில் ஒற்றுமை எனும் பன்முகத்தன்மை மனித உரிமையை வளர்க்கும்.

No comments:

Post a Comment