Wednesday 12 March 2014

தொடர்வேன் தொழுகையை இறைவனுக்கு நன்றி பாராட்டும் நோக்கத்தோடு

உடல் நலமில்லை உண்ண முடியவில்லை
உணவை வாயில் வைத்தால் கசக்கிறது
உணவு உண்ணமுடியாமல் உடலில் வாட்டம் வருகிறது
உண்ண முடியாவிட்டாலும் உண்பதை நிறுத்தி விடவில்லை
தொடர் முயற்சி தொல்லைகளை நீக்கி வைக்கும் என்ற நம்பிக்கை

இறைவனை தொழும்போது மனதின் கசடுகளால்
மனதை ஒருநிலைப் படுத்த முடியவில்லை
மனதை ஒருநிலைப் படுத்த முடியாவிட்டாலும்
இறைவனை தொழுவதை நிறுத்த வில்லை
தொடர்ந்து இறைவனை தொழுவதால்
இறைவன் என் மனதை அவன் நினைவில் என்னை ஒருமைப்படுதுவான் என்ற நம்பிக்கை


எண்ணங்கள் சிதறினால் இங்கு முயலும் முயற்சிகள் சிதறிப் போகலாம்
சிதறின வேலையால் பாதிப்பும் நிகழலாம்
இறைவன் கணக்கோ வேறு
இறைவனை வேண்டி நிற்பதை அவன் அறிவான்
எண்ணங்கள் சிதறுதல் சாத்தானின் தூண்டுதல் என்பதனையும் இறைவான்
எனது தொழுதலின் வேட்கையையும் அவன் அறிவான்
அவன் அறிந்ததால் அதற்க்குரிய பலனை அவன் கொடுப்பான்

தொழ வைப்பவர் தவறாக தொழ வைத்து விட்டார் தன்னை அறியாமல்
அவரைத் தொடர்ந்து தொழுபவருக்கு தொழுதலின் நன்மை கிடைத்து விடும்
குற்றமும் குறையும் தொழ வைத்தவரோடு முடிந்து விடும்
தொழ வைப்பவர் தவறு செய்வது அறிய ஒரு குரல் எழுப்பி
நாம் அவர் தவறை திருத்தச் செய்யலாம்
தவறை அறியாமல் நாம் போனதால் நம் மீது தவறல்ல
மனிதனுக்கு செய்த தவறை மனிதனும் மன்னிக்க மாட்டான்
மனிதனுக்கு செய்த தவறை இறைவனும் மன்னிக்க மாட்டான்
பாதிக்கப் பட்டவன் மன்னிக்காதவரை

இறைவன் அருளாளன், இரக்கமுள்ளவன்
இறைவனுக்கு செய்த தவறை இறைவனிடம் மன்னிப்பு தேடினால் இறைவன் மன்னிப்பான்
அறியாத செய்த தவறும் அவனது அருளால் மன்னிப்பு கிடைத்து விடும்
தொடர்வேன் தொழுகையை இறைவனுக்கு நன்றி பாராட்டும்
நோக்கத்தோடு

No comments:

Post a Comment