Sunday, 9 March 2014

மனிதனின் மாற்றமும் மனதளவில் ஏற்புடையதே !

தீவில் ஒருவன் தனியே இருக்க முடியாது .
தீவாக இருந்தாலும் பார்க்க முகம் வேண்டும் .அந்த முகம் மிருகத்தின் முகமானாலும் அதனுடன் மனிதன் நட்பை நாடுவான்.
முகமும் ,உருவமும் உள்ளத்தை விட உயர்வாகின்றது தனித்து விடும்போது.
முகம் மனிதனின் உணர்வுகளை காட்டும் .
மகிழ்வான முகங்கள் மற்றவர்களயும் மகிழ்விக்கும் .
மிருகமாய் இருந்தாலும் நம் முக மலர்ச்சி மிருகத்திற்கும் மகிழ்ச்சியை உண்டாக்கும் .

சமுதாயத்தின் ஒரு அங்கமே தனி மனிதன்
சமுதாயத்தின் உயர்வு தனி மனிதனையும் உள்ளடக்கியதுதான்
கொள்கைகளும் பிரிவுகளும் சமுதாயத்தின் மாற்றங்களை உருவாக்குகின்றன.
இனமும் ,மதமும் ஏற்றத் தாழ்வுகளை குறைக்க முடிவதில்லை
இல்லாதவனும் இருப்பவனும் ஒன்றிப் போவதுமில்லை
உள்ளத்தின் உணர்வுகளை முகம் காட்டி விடுகின்றது
முகத்தின் மாற்றங்கள் போல் சமுதாய மாற்றங்கள் வருவது இயல்பு
முக மாற்றம் வருவதால் நாம் முகத்தை மாற்றிக் கொள்ளவோ ,சிதைத்து விடவோ விரும்புவதில்லை
சமுதாயத்தில் மாற்றங்கள் நிகழும் போது சமுதாயத்தையே சிதைக்க முற்படுவதில்லை


வாய்ப்பை கொடுங்கள் .ஒரு முத்திரை கொடுத்து ஒதுக்கி விடாதீர்கள்
சுழளும் உலகத்தைபோல் மனிதனின் குணங்களிலும் அறிவிலிலும் மாற்றம் வரும்
மாற்றத்திற்கு முக்கியம் கொடுத்து சமுதாயத்தை சரி செய்ய வேண்டும் .
மனிதன் இயற்றிய சட்டங்கள் மனிதனால் மாற்றப் படுவது காலத்திற்கு உகந்ததுபோல் மாற்றப் பட வேண்டியது அவசியமாகின்றது .தத்துவங்களும் ,விஞ்ஞானமும் அறிய கண்டுபிடிப்பால் மாற்றங்களை நிகழ வைக்கின்றது.
மனிதனின் மாற்றமும் மனதளவில் ஏற்புடையதே !

No comments:

Post a Comment