கவலைப் படுவதில் கவலைபடாதே
கவலேயே மனதில் இறைவனை நிறுத்தச் செய்யும்.
மகிழ்ச்சி தன்னையும் மறந்து இறைவனையும் மறக்கச் செய்யும்
நடுநிலை தன்னிலை அறியச் செய்யும்
கவலைகள் கற்பனை வளத்தை வளர்க்கும்
கவலைகள் உந்து செய்தியை உருவாக்கும்
இவைகள் தன்னைப் பற்றி சிந்திக்கத் தெரிந்தவனுக்கு பொருந்தும்
குர்ஆனை மனனம் செய்து தொழ வைப்போர் தன்னிலை மறப்பார்
இறைவன் சிந்தனை மட்டும் அவர் மனதில்
தொழ வைக்கும் போது யாரேனும் அவர் முதுகில் குத்தினாலும் அவருக்கு அந்த வலி தெரியாது என்று ஒரு ஹாபில் சொல்லி கேள்வி
சில நேரங்களில் மழை கொட்டும்
சில நேரங்களில் மழை தூரல்களாய் விழும்
சில நேரங்களில் மேகம் அற்று வெறும் நிலை
மனதில் தோன்றும் எண்ண அலைகளுக்கும் இந்த அலை நிகழும்
// மகிழ்ச்சி தன்னையும் மறந்து இறைவனையும் மறக்கச் செய்யும் //
ReplyDeleteஇதை உணர்ந்தால் போதும்...