Friday 21 March 2014

முகமன் சொல்லி அளவளாவி அகமகிழ்தல் வாழ்வின் சுவையை கூட்டும்

பழையன கழிதலும் புதியன புகுதலும் மரபு .
புதுமை நாடுவதில் வாழ்வில் ஒரு உந்து சக்தி கிடைக்கும் .
பழமையை விரும்பி புதுமையை நாடாமல் இருத்தல் தேக்கத்தை உருவாக்கும்
பழைய நல்ல நினைவுகளை அசைபோடுதல் மகிழ்வுதான்
பழைய உறவுகள் தொடர புதிய உறவுகள் வர வாழ்வில் பிடிப்பு உண்டாகும்
நான்கு சுவற்றுக்குள் அடைக்கபடாமல் நான்கு திசைகளிலும் சென்று வர அறிவும் பெருகும்
முகநூலில் முடிச்சு போட்டவர்களை முறிச்சுப் போடாமல் நேரில் பார்த்து முகமன் சொல்லி அளவளாவி அகமகிழ்தல்
வாழ்வின் சுவையை கூட்டும்


#நோக்கம்
முகநூலில் அறிமுகமான நிறைய நண்பர்களோடு தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு மகிழ்வேன்

தொலைபேசி வழியே தொடர்பு கொண்டமையால் மற்றும் அவர்களை நேரில் கண்டு பேசியபோது ஒவ்வொரு மனிதர்களும் உயர்வானவர்களாக இருப்பதை அறிகின்றேன் .

மனிதன் நல்லவன் மக்கள் கொடியோர்
இனம் என்ற குலத்தை அறுத்து இனமாக இயங்கி வாழ்தல் உயர்வு
நோக்கம் உயர்வாக இருக்க செயல் குறுகிப் போனால் மாண்பு குறையும்
குற்றம் நோக்கின் சுற்றம் இல்லை
#அன்பு

No comments:

Post a Comment