Wednesday, 5 March 2014

கணினி விதவையாய் வாழ்வை இழந்து நிற்கிறது

ஓர் அறையில் அமைதியாய் கணினியில் கண்ட உலகம் மறைந்து போனது
ஓராயிரம் கோடி செலவு செய்து ராக்கட்டை விடுகின்றனர்

ஒளியை, நீரை கொடுக்க முடியாமல் பெருமை பேசுகின்றனர்
ஒளி கொடுக்க நீர் கொடுக்க தொழில் செய்கின்றனர்

செய்யும் தொழிலிலும் தேவையற்ற ஊழல்
சேவை செயயவே வந்தோர் செயலற்று நிற்கின்றனர்

முன்னேற்றம் வந்து வேதனையும் வந்தது
முற்கால மக்கள் மகிழ்வாகவே வாழ்ந்தனர்

ஆசைப்பட்டதை அடைய முயற்சிப்பதற்குள்
அரசாட்சி செய்வோர் அடைய விடுவதில்லை

தேடியதில் கிடைத்த முத்துக்கள் சேர்பதற்குள்
தேடியது கிடைத்த முத்துக்கள் இருள் கவ்வியதால் கை நழுவி போயின

சூரிய ஒளியும் நிலா ஒளியும் திடீரென்று குறைவதில்லை
மின்சாரம் மட்டும் திடீர் திடீரென்று நின்று போகின்றது

மின்சாரம் திடீரென்று நின்றதால் விரும்பியதை சேர்த்து வைக்க முடிவதில்லை

மின்சாரத்தின் உதவியோடு இயங்கும் கணினி விதவையாய் வாழ்வை இழந்து நிற்கிறது

காலத்தை கணினியில் ஒட்டுவதால் உடல் நலம் பாதிக்கின்றது அதனால் கணினியை வெறுக்கிறேன்

கணினியால் அருமையான நண்பர்களும் மற்றும் அறிவும் பெறுவதால் கணினியை மிகவும் நேசிக்கின்றேன்





No comments:

Post a Comment