Wednesday 26 March 2014

தேர்தல் வருது! சிந்தித்து செயல்படு !

தேர்தல் வருது
தேர்தலில் நிற்கும் வாக்காளர் வருவார்கள்
தேர்தலில் நிற்கும் வாக்காளர் தாங்கள் செய்யப் போகும் செயல்பாடுகளை விளக்குவார்கள்
தேர்தலில் நிற்கும் வாக்காளர் பற்றிய குணாதியங்களை அவர்கள் முகத்தில் அறிய முடியவில்லை
தேர்தலில் நிற்கும் வாக்காளர் பற்றிய குணாதியங்களை பற்றிய மற்றும் அவர் சார்ந்த கட்சியைப் பற்றி முகநூலில் விலா வாரியாக வசைபாடியும் வாழ்த்துப் பாடியும் பலவகையான கருத்துரைகளை தந்துள்ளார்கள்.
முகநூல் நண்பர்களும் மற்றும் தேர்தலில் நிற்கும் வாக்காளர்ளும் கொடுக்கும் வாக்கு உறுதிகளும் படித்தவுடன் ,கேட்டவுடன் கனவு கலைவது போல் காணாமல் போய் விட்டது
நான் கொண்ட உறுதி என்னுள்ளே அடக்கம்
என் மனமே எனக்கு வழிகாட்டி
கடந்த காலத்தில் நான் பெற்ற அனுபவங்களும் ,ஆதாயங்களும் எனக்கு வழிகாட்டும்

மற்றவர்கள் தங்கள் பக்கம் ஈர்க்க சொல்லிய  கருத்துகள் அனைத்தும் பொழுது போக்க உதவியது
உங்களுக்கு உங்கள் வழி
எனக்கு என் வழி
சூடு பட்டவனுக்கே அதன் கொடுமை தெரியும்
சுகம் அடைந்தவனுக்கே சுகத்தின் அருமை தெரியும்
சிந்திக்கும் ஆற்றலை பெற்று விட்டோம்
சுயமாக செயல்படுவோம்
சொல்வது உங்கள் உரிமை
சொல்வதை கேட்காமல் இருப்பதும் சுயமாக சிந்தித்து செயல்படுவதும் எங்கள் உரிமை
உங்கள் உரிமை எங்கள் உரிமையை பாதிக்கக் கூடாது
எங்கள் உரிமை உங்கள் உரிமையை பாதிக்கக் கூடாது
இதுதான் மக்களாட்சியின் மகத்தான மாண்பு

 மதத்தால் ,இனத்தால் இனம் காட்டி தூண்டி மடமையாக்க முயலும் கூட்டம் இதுவரை அந்த இனத்தின் படியும் அந்த மதத்தின் படியும் வாழ்ந்தவரா என்பதை யாரும் அறிந்தபாடில்லை .(இறைவனே அறிவான்) அந்த இனம் சொன்னபடியும் செயல்படவில்லை .
நேற்று ஒரு கொள்கையை பிடித்து அவர் பக்கம் ஓடினர்
இன்று ஒரு கொள்கையை பிடித்து இவர் பக்கம் ஓடுகின்றனர்
மனிதநேயத்திற்கு முக்கியத்துவம்கொடுக்காமல் காலத்திற்கு ஏற்றதுபோல் தொப்பியையும் துண்டையும் மாற்றுகின்றனர்
நேற்று வேண்டுமென்றனர் .இன்று வேண்டாமென்கின்றனர்
சமைக்க வாயு வேண்டுமாம்
வாயு தயாரிக்கக் கூடாதாம்
வங்காள விரிகுடாவில் கடல் பாதை வேண்டுமாம்
மதத்தின் பாலம் இருப்பதாக சொல்லி அந்த திட்டத்தை  நிறுத்த வேண்டுமாம்
பள்ளிவாசலை இடிப்பார்கலாம் கோவிலை கட்டுவார்களாம்
இதுதான் உங்கள் மனிதநேயமா! கொள்கையற்ற உடன்பாடு
முறையற்ற சேர்க்கை
காதில் பூ வைத்துக் கொண்டு வருபவர் இப்பொழுது இல்லை.மாற்றார் சொல்லும் கருத்துக்கு முழுமையாக அடிபணிந்து செயல்பட .

முதலாளித்துவம், சோசலிசம்,(ஜனநாயகப் புரட்சி நேரடியாக சோசலிசப் புரட்சிக்கு வித்து) பொதுவுடைமை இந்த மூன்று கருத்துகள் கொண்ட கட்சிகள் போதும் . மக்கள் விரும்பியதை தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும்

முதலாளித்துவம்
முதலாளித்துவ (survival of the fittest) கொள்கையில் திறமைக்கு முக்கியம் கொடுத்து தனியார்மய கொள்கையை ஆதரித்து செயல்படும் .
இதன் கொள்கையை ஏற்றுக் கொண்டால் உயர்ந்தோர் உயர்ந்த இடத்திலும் செல்வந்தர் மேலும் செல்வந்தராக உதவும் . அடிமட்டத்தில் உள்ளோர்களுக்கு வாய்ப்பு குறைவு .ஆலமரத்திற்கு அடியில் அடுத்த மரம் வளராது அழிந்து விடும்.
முதலாளித்துவ கொள்கையின் அடிபடையில் 1959-ல் மாமனிதர் ராஜாஜி, பேராசிரியர் ரங்கா மற்றும் எம்.ஆர். மசானி ஆகியோரால் நிறுவப்பட்டது இந்தியாவில் திரு.இராஜாஜி அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட சுதந்திரா கட்சி சில ஆண்டுகளுக்குள் இருக்கும் இடம் தெரியாமல் மறைந்து விட்டது

சோசலிசம்
சோசலிசம் மக்களாட்சி .அனைவருக்கும் சமவாய்ப்பு கிடைக்கும்.
சோசலிசகொள்கை  பொது நலம், கூட்டு செயற்பாடு என்ற கொள்கையைக் கொண்டது
இதில்  பெரும்பான்மையான துறைகளை அரசே  தன்வசம் வைத்து கொள்ளும் . சில துறைகளில் பல கெடுபிடிகளுக்கு உட்பட்ட அளவில் தனியாரும் ஈடுபடுவர்.


பொதுவுடைமை
பொதுவுடைமை தனிமனித முன்னேற்றத்தில் ஆர்வம் கொடுக்காது
வீடு இல்லாதவன் இருக்க மாளிகை கட்ட அனுமதிக்காது
நான் பசித்திருக்க நீ இனிப்பு உண்ண அனுமதிக்காது
உரிமைகள் கட்டுபடுத்தப் படும் .அனைத்தும் பொதுவுடமையாக்க முயற்சி எடுக்கும்(டாஸ்மார்க் மட்டுமல்ல)
உலகில் இன்று முழுமையான பொதுவுடைமை கொள்கை கொண்ட கம்யூனிச கொள்கைகளை மாற்றிக் கொண்டு சோசலிசம் கொள்கைகளை பின்பற்ற ஆரம்பித்து விட்டன.சீனா போன்ற நாடுகளிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது

எது வேண்டும் ! சிந்தனை தேவை .
அவர் சொன்னார் இவர் சொன்னார் என்பது முக்கியமல்ல
நீ என்ன முடிவு செய்யப் போகிறாய் அதுவே முக்கியம் .
சிந்தித்து செயல்படு

No comments:

Post a Comment