Friday 27 September 2013

ஒரு தேர்தல் வர திசை மாறி நிற்ப்போம்!

நாங்கள் மனிதர்கள்
எங்களுக்குள் பல இனம்
எங்களுக்குள் பல மொழி
எங்களுக்குள் பல நிறம்
எங்களுக்குள் பல பிரிவு
எங்களுக்குள் பல கட்சிகள்

நாங்கள் பேசிக்கொள்வோம்
நாங்கள் ஏசிக்கொள்வோம்
நாங்கள் ஏமாற்றுவோம்
நாங்கள் ஏமாற்றபடுவோம்
நாங்கள் பரிமாறிக் கொள்வோம்
நாங்கள் ஒரு தாய் தந்தை வழி வந்தவர்கள்
நாங்கள் ஒரு கட்சியிலிருந்து பிரிந்தவர்கள்
நாங்கள் ஒரு தேர்தல் வர திசை மாறி நிற்ப்போம்
நாங்கள் தான் உயர்வு என நாங்களே போற்றிக் கொள்வோம்

நாங்கள் நம்பியவர் நாசம் செய்தார்
நாங்கள் நம்பாதவர் மோசம் செய்தார்

நாங்கள் என்பது ஒற்றமையை குறிக்க வந்த சொல்
நாங்கள் என்பது இப்பொழுது வேற்றுமையை விரும்பும் சொல்லாக மாறியது

ஒருவன் சேர்க்க பல குடும்பமே உண்டது
ஒருவன் சேர்க்க ஒரு குடும்பமே உண்கிறது
ஒரு குடுப்பம் உண்ணும் நிலையும் குலைந்து போகும்
ஒரு நாட்டையே கெடுக்க நினைப்போர் இருக்கும் வரை

1 comment:

  1. சரியாகச் சொன்னீர்கள்...
    (குடுப்பம் = குடும்பம்)

    ReplyDelete