Tuesday 1 October 2013

விருப்பம் ஒன்றிருக்க வெறுப்பை நாடுவதேன்!

நான் உங்கள் கருத்தை விரும்புகிறேன்
நான் உங்கள் சில கருத்தை விரும்பவில்லை
நான் உங்கள் கருத்தை விரும்பவில்லை ஆனாலும் மாற்றுக் கருத்து சொல்ல விரும்பவில்லை

நான் மாற்றுக் கருத்து கொண்டிருந்தால் என் கருத்தை உங்கள் கருத்தோடு இணையாமல் தனியே தெரிவிப்பேன். அது உங்களுக்கு கொடுக்கப்பட்ட பதில் அல்ல



நான் அறிவேன் இரண்டு அறிஞர்கள் விவாதித்தால் பார்பவருக்கு யார் முட்டாள் என முடிவுக்கு வர முடியாது

நான் அறிவேன் அடுத்தவரை விவாதத்தால் மாற்ற முடியாது ஆனால் அன்பால் மாற்ற முடியும் என்பதை

நான் உங்கள் கருத்துக்கு மாற்றுக் கருத்து எழுதி உங்கள் மனம் நோகச் செய்ய மனமில்லை
நான் உங்கள் கருத்தை விரும்புகிறேன் நீங்கள் எனது கருத்தை விரும்புவதால்

நான் உங்கள் கருத்தை விரும்பி பல முறை லைக் போட்டு தெரிவித்தும் நீங்கள் ஒரு முறை கூட என் கருத்தை விரும்பி லைக் போடவில்லை அதனால் உங்கள் கருத்தை விரும்பினாலும் உங்களுக்கு லைக் போட மனமில்லை. விருப்பம் இரு பக்கமும் வீசுவதாக இருக்க வேண்டும்

நான் உங்கள் நண்பனாக இருப்பேன் ஆனால் உங்களை பின் தொடர மாட்டேன் .
நான் உங்களை பின் தொடர்ந்தால் நீங்களும் என்னை பின் தொடரவேண்டும். பின் தொடர்ந்து ஆமாம் போட்டுக் கொண்டு இருக்க என்னால் முடியாது

நான் குடும்பத்தோடு மக்களோடு நேசமாக இருக்க விரும்புகிறேன்
நான் இருப்பதுபோல் என் பையனும் இருக்க விருபுவதை விட என்னைவிட உயர்வாக வர வேண்டுமென்பதே என் விருப்பம் ,இதுதான் மற்றவருக்கும் .அதனால் அவர்கள் வாழ்வை அவர்களே தீர்மானிக்கட்டும்.

நான் பெற்ற அறிவு குறைவாக இருக்க அடுத்தவரை பின் தொடரச் சொல்வது முறையல்ல
நான் பெற்றிருக்கும் வெற்றியும், தோல்வியும் இறைவனது நாட்டப்படி அமைந்தது விட்டது
நான் எப்படி உங்களுக்கும் அதுவாகத்தான் இருக்க வேண்டும் என்று விரும்புவது

நான் உங்கள் முயற்சியில் வாருங்கள் மற்றும் உதவி தேவைப் பட்டால் மற்றவரிடம் உதவி கேட்க தயங்காதீர்கள் .அவர்கள் உதவி கிடைக்கா விட்டால் அவர்களை வெறுக்காதீர்கள் என்பதே என் விருப்பம் .இறை நாட்டமின்றி எதுவும் நடக்காது .முயல்வது நம் கடமை முடித்து வைப்பது இறைவனின் நாட்டம்

நான் முழுமையாக பின் தொடர விரும்புவது இறைவனுக்கு மட்டும்தான்

4 comments:

  1. ஒவ்வொரு வரியும் அனுபவம்... அனைவருக்கும் ஒரு பாடம்... வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  2. பள்ளிக் குழந்தைகளிடம் ஒரு சுவாரஸ்யமான உரையாடல்...

    Link : http://dindiguldhanabalan.blogspot.com/2013/09/If-you-are-a-BIRD.html

    ReplyDelete
  3. ரொம்ப அருமையான பதிவு... மிக பெரிய அனுபவும் ...

    சிந்திக்க வேண்டிய விசையும் நிறைய இருக்கு .... அண்ணன்

    ReplyDelete
  4. ரொம்ப அருமையான பதிவு...
    அனுபவும் நிறைந்த வரிகள் ..... அலி அண்ணன்

    ReplyDelete