Friday 4 October 2013

எத்தனை காலம் சிதைந்து போவோம் சிறப்பற்ற ஆட்சியால் !

காரியத்திற்கு காரணம் உண்டு
காரணம் அற்ற செயல் விரயம்

செயல் மேன்பட திட்டம் வேண்டும்
திட்டமில்லா செயல் தடம் புரளும்

காரணமும் காரியமும் நன்மையை நாடி நிற்க வேண்டும்
நோக்கம் நன்மையை அற்றுப் போக செயல்திறன் விலகிப் போகும்

முடிவு நினைத்தபடி இருக்க செயலில் கீழ்மை இருப்பின் வினையும் வீண்தான்
செயலில் உயர்வாய் இருக்க முடிவும் வெற்றி பெற மன நிறைவுதான்

வெற்றி கிட்ட திருடனின் கூட்டு தகுமோ!
திருடனின் கூட்டால் பெற்ற உறவு திருடவே வழி வகுக்கும்

பெற்றதும் வென்றதும் முறையோடிருக்க மக்கள் பயனடைவர்
மக்களால் கிடைக்கப் பெற்ற வெற்றி மக்களுக்கே போய்ச் சேர நாணயம் வேண்டும்

நாணயம் பண நாணயத்தை சேர்ப்பதில் இல்லை
நாணயம் நற்செயலை நாடி நிற்பது

கெடு மனம் கொண்டோரை சேர்த்து செயல்பட்டால் சீரழிந்து போவாய்
நிறை மனம் கொண்டு நல்லோரிடம் சேர நற்பயன்கள் உமை வந்தடையும்

பணத்துக்காக வாக்குச் சீட்டை தந்தவன் பணத்தையே நாடி நிற்ப்பான்
இனாமுக்கு வாக்குச் சீட்டை வாரி தந்தவன் இனாமையே தேடி அலைவான்
இனதுக்காக வாக்குச் சீட்டை போட்டவன் இனவெறி கொண்டு அலைவான்
பிரித்தாளும் மனம் கொண்டவன் பிரிந்து போய் நிற்ப்பான்

நல்லாரையும் திறமையாளரையும் தேடிப் பிடித்தவன் நிறைவாக இருப்பான்
சமைக்கத் தெரியாது சமைத்ததை ருசிக்கத் தெரியும்
ஆட்சி செய்யத் தெரியாது ஆனால் உன் ஆட்சி வந்தால் என்ன நிலை ஆகுமென்பது தெரியும்

எத்தனை காலம் சிதைந்து போவோம் சிறப்பற்ற ஆட்சியால்
இத்தனை காலம் கிடைத்த அனுபவ அறிவு சிறப்பாக எங்களை செயல்பட வைக்கும்
-----------------------------------------------
* வாடை வந்தால் மூடி விடு கதவை. தென்றல் வந்தால் திறந்து விடு கதவை .வாடைக் காற்று உடலைப் பாதிக்கும் .வடக்கிலிருந்து வரும் பாஜகவோ மனித நேயத்தை போக்கி விடும் .வருமுன் பாதுகாப்பு தேடி கொள் காலம் காலமாக போற்றி வந்த சகோதர பாசத்தை அழித்து விடும் இந்த பாஜக

No comments:

Post a Comment