Tuesday 15 October 2013

சாக்கடையில் வளர்ந்த ரோஜா செடியில் பூத்த ரோஜா மலர்


பெற்றவளை அறியேன்
பெற்ற கரு உருவாக்கியவனை அறியேன்

பெறுவதற்கு காரணமான காம காமுகனை அறியேன்
பெற்றவள் காரணமில்லாமல் சாக்கடையில் எறிந்தவளை அறியேன்

நான் அறிவேன் காரணத்திற்காகத்தான் நான் வாழ்வதனை
நான் அறிவேன் காரணத்திற்காக என்னை இறைவன் உயிர்பித்தானென்று

உற்றார் உறவினர் இல்லை உதவி செய்ய
மற்றோர் உறவற்றவர் கூசாமல் குறை சொல்லி செல்கின்றார் 

நான் செய்த உதவிகளை மறந்து நிற்கின்றார்
நான் போடும் பிச்சைகளை பகிர்ந்து உண்கின்றார்

சாக்கடையில் வளர்ந்த ரோஜா செடியின் பூக்களை  தலையில் வைத்து மகிழ்கின்றார்
சாக்கடையில் வீசப்பட்டு வெளியில் வந்து வளர்ந்தான் புகழ் வளர மறுக்கின்றார்

காரியம் மென்றால் கை கட்டி நிற்கின்றார்
காரியம் முடிந்தபின் கை கொட்டி சிரிக்கின்றார்

இறைவனது படைப்பை ஏளனம் செய்கின்றார்
இறைவனால் இவர் ஏளனப் படுத்தப் படுவார் என்பதனை மறக்கின்றார்

இறைவா நான் அவர்களை யேசவில்லை
இறைவா நான் அவர்களை மன்னிக்கவே செய்கின்றேன்


"அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களைத் தவிருங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! அவை எவை?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதும், சூனியம் செய்வதும், நியாயமின்றி கொல்லக் கூடாது என்று அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிரைக் கொல்வதும், வட்டி உண்பதும், அனாதைகளின் செல்வத்தை உண்பதும், போரின்போது புறமுதுகிட்டு ஓடுவதும் அப்பாவிகளான, இறைநம்பிக்கை கொண்ட, கற்புள்ள பெண்களின் மீது அவதூறு கூறுவதும் தான் (அந்தப் பெரும் பாவங்கள்)" என்று (பதில்) கூறினார்கள். 
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
புகாரி ஹதீஸ்: 2766

உங்களில் ஒருவர் வறண்ட பாலைநிலத்தில் தொலைத்துவிட்ட தன்னுடைய ஒட்டகத்தை (எதிர்பாராதவிதமாக)க் கண்டுபிடிக்கும்போது, அவருக்கு ஏற்படும் மகிழ்ச்சியைவிடத் தன் அடியான் தவ்பா -- பாவமன்னிப்புப் கோரி தன்னிடம் திரும்புவதில் அல்லாஹ் அதிகம் மகிழ்ச்சி அடைகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி :6309 அனஸ் (ரலி).

No comments:

Post a Comment