Wednesday 16 October 2013

வேத வழி நாடாத வாழ்க்கை !



வடிக்கும் காலமும் தொடர படிக்கும் காலமும் வளர்கிறது பெண்களிடத்தில்
கற்காத சமுதாயம் கிடப்பில் கிடக்கும்
கற்காத சமுதாயம் நாட்டின் வளர்ச்சியையும் தடுக்கும்

வேதம் படித்து வீம்பு பேசுவோர் நிலை மாற வேண்டும்
வேதம் படித்தல் அன்புடன் பேசி மற்றவரை மதிப்பதற்கே

வேதம் படித்தோர் கருத்தால் விளக்கத்தால் போராடுகின்றனர்
வேதம் படிக்காதோர் வேதம் படித்தோர் நிலையை தொடர்கின்றனர்

பார்பவருக்கு வேதம் போராட்ட குணத்தை வளர்த்து விடுமோ! யென எண்ணுகின்றனர்
வேதம் படித்ததில் குற்றமா ! வேதம் கற்பித்தலில் குற்றமா !

வாழ்க்கை வேதம் நாடி  நிற்க
வாழ்க்கை பேதம் நாடி நிற்கா

வேதம் நாடாத வாழ்க்கை எச்சமாகும்
வேட்கை இல்லா விரைய வாழ்க்கை

மிச்சமான வாழ்க்கை வேத வழி நிற்க
சுவன வாசல் திறக்கும்

வேதம் வழி நாடாத வாழ்க்கை நரக வழி காட்டி நிற்கும்
வாழ்வை சிதைத்து வாழ்ந்த வாழ்க்கை

வேதம் வழி விரும்பாத  வாழ்க்கை
வாழ்க்கை சிதைந்த செடிகளாய்
வற்றிய ஓடைகளாய்
வறண்ட பூமியாய்
மழை கொட்டாத மேகமாய்
மனம் இல்லாத இதயமாய்
காதல்  இல்லாத காமமாய்
பாசம் இல்லாத குடும்பமாய்
யாப்பு இல்லாத கவிதையாய்
சிதைந்து செல்லாத வாழ்க்கையாகி
மறைந்து மாய்ந்து விடும்
தவ்பா.(மனவருந்தி மன்னிப்பு தேடுதல்)

No comments:

Post a Comment