Saturday 19 October 2013

பெண்ணே நீ செய்த குற்றமா !

மாதவிடாய் வந்து ஒதுங்கி நிற்கிறாய்

மலடியாய் பிள்ளை பெறாமல் இருக்கிறாய்

கர்பினியாய் காலம் நிர்ணயிக்கிறாய்

பிரசவமாகி காமப் பசி கணவனை காய வைக்கிறாய்

கணவன் விடுத்து அடுத்தவன நேசிக்க வெறுக்கிறாய்

அழைத்த நேரத்தில் அயராது வேலை செய்த களைப்பில் உறங்குகிறாய்

அழகாக இருக்க அடுத்தவர் மனதை கொள்ளை கொள்கிறாய்

அடுத்தவர் காண அழகை மறைக்க ஆவன செய்கிறாய்

கணவனைக் காண அழகை அழகு படுத்துகிறாய்

அறியாமை அகல ஆழ்ந்து படிக்கிறாய்

அடிப்படியிலேயே இருக்கச் சொல்பவர்களை அதிசியமாக பார்க்கிறாய்

அறிந்த அறிவை அடுத்தவருக்கு ஏற்றி வைக்க விரும்புகிறாய்

இயல்பாய் இருக்க இசையை விரும்புகிறாய்

இத்தனையும் உன்னிடத்தில் இயற்கையாய் இறைவன் கொடுக்க இது குற்றமாக்கி விடுமோ !

1 comment:

  1. நல்லதொரு சிந்தனை... பாராட்டுக்கள்...

    ReplyDelete