Saturday 26 October 2013

பிரயாணம் தந்த பாடம்

பெட்டியை சுமந்து சென்றேன் உலகம் சுற்ற
பெட்டியில் சுமை இல்லை
பெட்டியில் இருந்தது பணம் எடுக்கும் வங்கித் தாள்கள்

பிரயான வங்கித்தாள்கள் (Traveler's cheque) போகும் நாட்டுக்கு அனுமதி(விசா) கிடைக்க உதவியது
பிரயானம் செய்த நாடுகளில் தேவையானவைகளை வாங்க வங்கித்தாள்கள்(Traveler's cheque) பணமாக்கப் பட்டு உதவின
பிரயானத்தில் சுமை சுமந்து செல்வது பிரயாண மகிழ்வை கெடுக்கும்
பிரயானம் செல்வது அறிவை உயர்த்திக் கொள்ள உதவ வேண்டும்

தனித்து பிரயாணம் செய்வதால் பல அனுபவங்கள் கிடைக்கும்
தனித்து போனவர் தனியே இருக்க விரும்பாமல் பலரோடு பழக முயல்வார்

புதிய நட்பு புனிதமாகவும் ஆகலாம்
புதிய நட்பு பிரயாண முடிவில் முடிந்தும் போகலாம்
புதிய நட்பால் கிடைத்த பாடங்கள் புதிய வாழ்விற்கு வழியும் காட்டலாம்

போகும் இடமெல்லாம் உங்கள் மொழி உதவாமல் போகலாம்
போகும் இடமெல்லாம் உங்கள் செய்கையும் உதவலாம்
செய்கை மொழி அறிய ஊமை மொழி அறிந்துக் கொள்வது சிறப்பு
செய்கை மொழி அறிய 'மொழி' படம் பாருங்கள்

ஆங்கிலமும் தமிழும் அறிந்தால் போதும் என்பது தவறு
பல மொழிப் புலமை அறிவு ஆற்றலைத் தரும்
அறிவு உந்துதல் சக்தியை உருவாக்கும்
பணமும் பொருளும் திருடப் படலாம்
அறிவு திருடப் பட்டாலும் நன்மை தரும்
அறிவு திருடப் பட்டாலும் அது நம்மை விட்டு குறையாது 

No comments:

Post a Comment