Wednesday, 16 October 2013

மறை ஓதி மறை வாழ்வு வாழ்தல் உயர்வு

பிறையின் காட்சி வளரும் குறையும்
மனிதனின் வளர்ச்சி வளர்ந்து மறையும்

பிறையின் காட்சி மறைந்தும் வரும்
மனிதனின் வளர்ச்சி வளர்ந்தும் மறைந்து போகும்

பிறையில் குறை இல்லை
பிறை பார்ப்பதில் குறை உண்டு

குறை சாட்சி தீர்ப்பில் குறைவாகிவிடும்
குறை பார்த்த வாழ்வு சிறையாகிவிடும்

நிறை கண்ட வாழ்வு நிம்மதி தரும்
நிறை செய்த நன்மை சுவனம் தரும்


மறை ஓதி மறை வாழ்வு வாழ்தல் உயர்வு
மறை ஓதி மறை வாழ்வு வாழ மறுத்தோர் நிலை தாழ்வு

கறை கண்டால் மனம் சுருங்கும்
நிறை கண்டால் மனம் மகிழும்

வெண்மை நிறம் சமாதானம் சொல்லும்
வெண்மை நிறம் விரும்பி உடுத்தல் பெருநாளின் சிறப்பு

No comments:

Post a Comment