Friday 4 October 2013

நீங்கள் நல்லவரா? அல்லது கெட்டவரா?

 நீங்கள்  நல்லவரா? அல்லது கெட்டவரா?

நான் மிகவும் நல்லவன் .அனைவருக்கும் உதவி செய்வேன் .
உனக்கு பாதகம் செய்தவனுக்கும் ,தொல்லை  கொடுப்பவனுக்கும்  உதவுவீரா?
அது எப்படி முடியும். எனக்கும் ஒரு மனம் ஒன்று உள்ளதே! பழி வாங்க மாட்டேன் ஆனால் உதவ மாட்டேன். துஷ்டனைக் கண்டால் காத தூர போய்விடுவேன்.
அப்படி என்றால் நீங்கள் எப்படி நல்லவராக இருக்க முடியும்?
நான் நல்லவனுக்கு நல்லவன். கெட்டவனுக்கு  கெட்டவனில்லையே!  அவனைக் கண்டு ஒதுங்கி விடுவேன்.
உங்கள் செயல் உயர்வாக ஆக அனைவருக்கும் நன்மையை நாடி உதவுவதுதான் உயர்வு. அவிதம் செய்தால் கெட்டவரும் நல்லவராகி விடுவார் அல்லவா!
நல்லவனுக்கு நல்லவனாக இருப்பது  ஒன்றும் புதுமையில்லை . கெட்டவனுக்கும் நல்லவனாக இருப்பதுதான் உயர்வு.
அதைத்தானே திருவள்ளுவர், ''இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நான நன்னயம் செய்து விடல்' என்று கூறுகிறார்.
அதுதானே நபி காட்டிய வழியாக உள்ளது .
"உன் சகோதரன் அநியாயம் செய்பவனாக இருக்கும் நிலையிலும், அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையிலும் உதவி செய்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் "அல்லாஹ்வின் தூதரே! அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையில் நான் உதவி செய்வேன், ஆனால் அவன் அநியாயம் செய்யக்கூடியவனாக இருக்கும் போது எப்படி உதவுவது என்று எனக்குக் கூறுங்கள்" என்றார். "அநியாயம் செய்வதிலிருந்து நீ அவனைத் தடுக்க வேண்டும். அதுவே அவனுக்கு நீ செய்யும் உதவி" என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி

நாயகத்தின் மீது குப்பையை கொட்டிய மூதாட்டி
ஒரு யூத மூதாட்டி அல்லாஹ்வின் தூதர் அதிகாலை நேரங்களில் சுபஹ் தொழுகை முடித்து திரும்பி வரும்வேளைகளில் அவர் மீது தினமும் தவறாமல் குப்பையைக் கொட்டி மகிழ்ந்திருந்தாள் .ஆனால் அல்லாஹ்வின் தூதர் அதனை சகித்துக் கொண்டிருந்தார்கள் ஒருநாள் அந்த மூதாட்டியை காணாது போகவே அல்லாஹ்வின் தூதர் அவர்கள் அந்த மூதாட்டியை தேடிச் சென்று பார்த்தார்கள் அந்தமூதாட்டி நலக்குறைவால் படுக்கையில் இருந்தால் அந்தப் பெண்மணிக்கு அல்லாஹ்வின் தூதர் ஆறுதல் கூறி திரும்பினார்கள் என்பது இஸ்லாமிய வரலாறு.

3 comments:

  1. இந்தப் பாடல் எனக்கு மிகவும் விருப்பமான பாடல். நான் அபிராமம் என்ற ஊரில் இருக்கும் போது அதிகம், பெருநாளின் போது அதிகாமக் கேட்ட பாட்டும் இதுதான்.

    ReplyDelete
  2. அறிந்துகொண்டேன்.. பகிர்வினிற்கு மிக்க நன்றி..
    எனது தளத்தில் பயன்மிக்க பதிவொன்று: கணினியை சுத்தம் செய்ய புதிய "CCleaner" மென்பொருள்

    ReplyDelete
  3. @suppuduRaj & Muthu Kumar Sதங்கள் வருகைக்கு நன்றி

    ReplyDelete