Sunday 13 October 2013

ஆடையில் ஒரு இழை குறைந்தாலும் ஆடை சிறப்பாகாது

Say Something Nice- நல்லதைச் சொல்
 

வேலை என்ற வலையில் சிக்கினேன்
வேலை எனக்கு கலையாக இருந்தது

ஒரு வாரம் ஓயாத வேலை
ஒரு வாரம் செய்த வேலையால் சிறிது தொய்வு

தொய்வு தேடியது ஓய்வு
ஓய்வு கொடுத்தது உத்வேகம்

ஒரு வாரம் பார்க்காத நண்பர்களைப் பார்த்தேன்
ஒரு வார்த்தை சொன்னார்கள் 'ஏன் மெலிந்து விட்டாய்'

நண்பர்கள் சொன்னது மனதை வாட்டியது
மனதை வாட்டிய மனம் மெலியச் செய்தது

மெலிந்து விட்டதாக சொன்னதால் மனதில் ஒரு ஏக்கம்
மெலிந்து விட்டதாக சொன்னதால் உடலை கண்ணாடியில் பார்த்தேன்

நான் முன்பைவிட கனத்து சதைப் பிடிப்போடு இருப்பதாக உணர்ந்தேன்
நான் மனைவியை கேட்டேன் நீங்கள் முன்பைவிட இப்பொழுது அழகாக உள்ளதாக சொன்னாள் 


மனைவி சொன்னது மனதிற்கு மகிழ்வை தந்தது
மனைவி சொல்வது காதலாலா அல்லது பாசத்தினாலா

நன்றாக இருந்த மனம் மற்றவர்கள் நையாண்டியாக சொன்னதால் நைந்து போனது
நன்றாக இருந்தாலும் குறை சொல்கிறார்கள்

குறையாக இருந்தாலும் நிறைவாக சொல்வதில்லை
நமக்கென்று ஓர் மனம் வேண்டும்

குறை காண்பவர்களைக் கண்டு விலகி நிற்க வேண்டும்
நிறை கான்பவர்களோடு நீடித்து நட்பை தொடர வேண்டும்

மனைவி மனம் வாடும் போக்கில் பேச மாட்டாள்
மனைவி நம் உடலில் ஓர் அங்கம்

பல நூல்களால் பின்னப்பட்ட ஆடை திருமணம்
ஆடையில் ஒரு இழை குறைந்தாலும் ஆடை சிறப்பாகாது

அன்பு தழைக்க நம் மனம் உறுதியாக இருக்க வேண்டும்
உலகமே ஒன்று சொல்ல நம் மனம் சிறப்பை சொன்னால் போதும்

உலகம் என் கையில் அடக்கம்
உயர்ந்த உள்ளம் இந்த பிரபஞ்சத்தை வெல்லும்

அகத்தின் அழுக்கு உள்ளத்தில் சுருக்கம்
அகத்தின் அழகு மகிழ்வில்  விரியும்

மனம் உயர்வையே சொல்ல வாழ்வேன்
அகத்தின் அழகு முகத்தில் 

1 comment:

  1. சின்ன பாராட்டும் சந்தோசம்... // மனம் உயர்வையே சொல்ல வாழ்வேன் // சிறப்பு...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete