Tuesday 22 October 2013

திருமணம்

திருமணம் சுவனத்தில் நிச்சயிக்கப் படுகிறது
தாயின் மடியில் சுவனம் இருக்கிறது
தான் விரும்பிய பெண்ணாய் இருப்பினும்
தாயின் விருப்பதிற்கு முதல் இடம் கொடுப்பர்

தாயைப் போல பிள்ளை
நூலைப் போல சேலை
தாயின் குணம் பெண்ணுக்கு இருக்கும்
பெண்ணின் தாய் குணம் அறிந்து பெண் எடுத்தல் சிறப்பு

தெரியாத கழுதையை விட
தெரிந்த கழுதை நல்லது
தெரியாத கழுதை எப்பொழுது உதைக்கும் என்பது தெரியாது
தெரிந்த கழுதை எப்பொழுது உதைக்கும் என்பது தெரியும்

அறிந்தவளை திருமணம் செய்
அறிந்து திருமணம் செய்
அறிதல் வேலையை பெறோரிடம் கலந்து செய்
அறிந்து காதல் வயப்பட்டோமென்று தனித்து செயல்படுதல்
அறியாமலேயே துன்பத்தை சேர்த்து வைக்கும்

மோகத்தை மாற்ற மாற்று வழி திருமணமே
சோகம் வராமல் வாழ்க்கைப் பட்டவளிடம் பாசத்தை காட்டிவிடு
பாசம் வர நேசமும் காதலும் உன்னை ஒட்டிக்கொள்ளும்
பாசம் வர வசந்தம் வீச வாழ்வு மலரும் .

ஒரு பக்கம் வீசும் காதல் கானல் நீர்
இரு பக்கமும் இணைந்தால் அது தென்றல்

காமத்தில் காதல் இல்லை
காதலில் காமம் உண்டு

காமம் நிமிடத்தில் நின்று மறையும்
வாழ்வில் இணைந்த காதல் காலத்தால் ஒன்றி நிற்கும்

வாழ்வில் இணைந்த காதலுக்கு மொழி இல்லை மரணமும் இல்லை

No comments:

Post a Comment