Wednesday 30 October 2013

நெஞ்சில் ஓர் இறுக்கம் இருப்பதனை இருத்தி வைத்தால்.

பல வார்த்தைகள் ஒரு வரியாகிறது
ஒரு கருத்து பல வரிகளாகிறது

ஒரு கருத்து மனதில் பதிகிறது
பல கருத்துகள் மறந்து போகிறது

ஒரு சொல் உயிரையே மாய்கிறது
ஒரு சொல் உயிரை வாழ வைக்கிறது
அம்பு ஏய்தவன் மகிழ்கிறான்
அம்பால் அடிப்பட்டவன் மரணிகின்றான்

எயதவனுக்கு நொய்வில்லை
எய்யப்பட்டவனுக்கு வேதனை

சொல்வதை உயர்வாககச் சொல்
சொல்வது உயர்வாய் இருக்க இருபக்கமும் உயர்வு

சொல்வது உன்னதாய் இருக்கட்டும்
சொல்வதில் ஏன் கடன் வாங்கி சொல்கிறாய்

உன்னிடம் உயர்வாய் இருக்க
உயர்வாய் உன்னிடம் இருப்பதனை பகிர்ந்து விடு




கொடுப்பதில் விருப்பம்
கொடுப்பதை விரும்பியதை கொடுத்து விடு

கொடுப்பதை விரும்பாததை கொடுப்பதை தடுத்து விடு
கொடுப்பதில் விரும்பியதை கொடுப்பதில் உயர்வு

நெஞ்சில் ஓர் இறுக்கம்
இருப்பதனை இருத்தி வைத்தால்

மனதில் ஓர் வெளிச்சம்
வெளிச்சத்தை வெளியில் பாய்ச்ச

சிப்பியை தேடி கொணர்ந்தாய்
சிப்பிக்குள் உள்ள முத்தை எடுக்க ஏன் முனையவில்லை

2 comments:

  1. /// உன்னிடம் உயர்வாய் இருக்க
    உயர்வாய் உன்னிடம் இருப்பதனை பகிர்ந்து விடு... ///

    சிறப்பான வரிகள்... (நேற்றே இந்தப் பகிர்வு வந்தது...)

    ReplyDelete
  2. இன்று : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/charity.html

    ReplyDelete