Thursday 31 October 2013

திரும்பி வர தகுதியும் திறமையும் இருந்தால் தவிர இருக்கும் இடத்தை விட்டு வெளியேறுவது சிறப்பல்ல.



  கொடுமைக்காரர்களின் தொல்லை அதிகமாக பிறந்த இடத்தையும் வாழ்ந்த இடத்தையும் விட்டு (ஹிஜரத்) வெளியேறியவர்கள் சரித்திரத்தில் நபிகள் நாயகம்ஸல்) அவர்களும் அவர்களை சார்ந்தவர்களும்.

ஆனால் அவர்கள் திரும்பவும் தங்கள் பிறந்த இடத்திற்கும் வாழ்ந்த இடத்திற்கும் வர முடிந்தது

”நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்” என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 3 : 31)

பல நாடுகளில் பிறந்த இடத்தையும் வாழ்ந்த இடத்தையும் விட்டு வெளியேறியவர்கள் திரும்பி தன் இடத்திற்கு வர முடியாமல் தத்தளிகின்றார்கள். ஒன்றும் அறியா மக்கள் கொடுமைக்காரர்களின் தொல்லையால் அவதிப்பட்டு அல்லல்படுகின்றார்கள்.

இஸ்ரேலியர்களால் அவதிக்குள்ளானவர்கள் பாலஸ்தீனத்தை விட்டு வெளியேறினார்கள்.
அவர்கள் பல நாடுகளில் வசித்துக் கொண்டு தங்கள் நாட்டுக்கு வர முடியவில்லை.

சிங்களவர்களால் இலங்கையில் அவதிப்பட்டு வெளியேறிய தமிழர்கள் பல நாடுகளில் அகதிகளாக வாழ்கிறார்கள். இதே நிலை முஸ்லிம்களுக்கு  பர்மாவிலும் .

இந்நிலை இப்பொழுதும் நம் நாட்டிலும் நிகழ்கின்றது. நம் நாட்டில் மத பித்து பிடித்த சக்திகளால் தொல்லைக்கு உள்ளானவர்கள் உயிருக்கு ஆபத்து வரும் நிலையில் தாங்கள் வாழும் இடத்தை விட்டு வெளியேறியவர்கள் (முசாபர் பூரில் கலவரம் நடந்தபோது ஊரை விட்டுப் போனவர்கள்) தங்கள் இடத்திற்கு வர முடியாமல் அகதி முகாம்களில் அல்லல் படுகிறார்கள் .
(முசாபர் பூரில் கலவரம் நடந்தபோது ஊரை விட்டுப் போன நான்கு முஸ்லிம் இளைஞர்கள் மீண்டும் ஊருக்கு வந்தபோது அவர்களை வழி மறித்து தாக்கி அடித்தே கொலை செய்திருக்கிறார்கள் மத வெறியர்கள்.)

திரும்பி வர தகுதியும் திறமையும் இருந்தால் தவிர இருக்கும் இடத்தை விட்டு வெளியேறுவது சிறப்பல்ல .

அது இறைவனை தொழுமிடமாக இருந்தாலும் அல்லது வாழுமிடமாக இருந்தாலும் .

1 comment:

  1. /// திரும்பி வர தகுதியும் திறமையும் இருந்தால் தவிர இருக்கும் இடத்தை விட்டு வெளியேறுவது சிறப்பல்ல... ///

    அப்படிச் சொல்லுங்க...! அருமை... வாழ்த்துக்கள்..

    ReplyDelete