Thursday 24 October 2013

தவறான ஆசைகளை ( Nafs ) அடக்க வேண்டும்

பிறப்பால் முஸ்லீம்
வளர்ப்பால் முஸ்லீம்
இறப்பிலும் முஸ்லீமாக
இருக்க வேண்டும்

கொள்கையால் இஸ்லாமிய வழி
கொள்கை இருக்க நெறி அறிதல் வேண்டும்
அறிதல் இருக்க அதன்படி வாழ வேண்டும்
ஆசைகள் ( Nafs ) வாழும் வழியை தடுமாற வைக்கின்றது
ஆசைகள் பாவங்கள் சேர வைகின்றது
ஆசைகளை அடக்க வேண்டும்

ஆசை பேராசையாக மாறுகிறது
பேராசை அழிவுக்கு வழி காட்டுகிறது
ஆசைப்படுவது நற்காரியங்களுக்கு இருத்தல் வேண்டும்
நற்காரியங்கள் நடைபெற பொறுமை வேண்டும்
பொறுமையற்றவன் போக்கிரியாக மாறலாம்
பொறுமையற்றவன் மார்க்கம் தந்த வழி தவறி செயல்படலாம்


சப்று (பொறுமை) என்றால்
நபி(ஸல்)சொன்னார்கள் :

“அஸ்ஸப்ரு இன்த ஸத்மத்தில் ஊலா “
துன்பம் உள்ளத்தைத் தாக்கிய முதல் நிலையிலேயே மனதை கட்டுப்படுத் வதுதான் பொறுமை “ (திர்மதி)


ஆண்டவனை நினைக்க வேண்டும்
இறைவன் காட்டிய வழி நடக்க வேண்டும்
தவறான ஆசைகளை ( Nafs ) அடக்க வேண்டும்
ஆசைகளை போராடி வெல்ல வேண்டும்
ஆசைகளை வெல்வதே உயர்ந்த ஜிஹாத்

மனத்தின் தீய எண்ணங்களை ( Nafs ) அகற்ற வேண்டும்
மனத்தின் தீய எண்ணங்கள் மறைய மறை வழி பேண வேண்டும்
மனதில் இறைவன் நினைவு எந்நிலையிலும் இருத்தல் வேண்டும்
என்னிலை அறிந்து இறைவன் அருள் கிடைக்க வேண்டி நிற்கின்றேன்
என்னிலை இறைவன் காட்டிய வழியில் வாழ்ந்து அவனை அடைய வேண்டும்

2 comments:

  1. அவரவர் ("கட"... "வுள்")நிலை அறிந்து அனைவரும் இவ்வரும் நினைக்க வேண்டும்... பாராட்டுக்கள்...

    ReplyDelete
  2. அவரவர் ("கட"... "வுள்") நிலை அறிந்து அனைவரும் இவ்வாறு நினைக்க வேண்டும்... பாராட்டுக்கள்...

    ReplyDelete