Saturday 1 February 2014

எல்லாமே என்னிடம் இருந்திருந்தால்! என்னிலை என்னால் அறிந்திருக்க மாட்டேன் .

எல்லாம் என்னிடம் இல்லை
இல்லாததை பெற ஆசையை கொடுத்தாய்

அனைத்தும் அறியாததால்
அறிவை கற்கும் தேடலை தந்தாய்

சிரமத்தை தந்தாய்
சிரமத்தை நீக்கும் வழியை காட்டினாய்

அளவோடு கொடுத்தாய்
தேவையானதை தேடச் சொன்னாய்

வட்டத்தின் வரம்புகளில் நிற்க வைத்தாய்
முன்னேற்றத்தின் வாய்ப்புகளை உருவாக்க வைத்தாய்

களைத்து ஓயச் செய்தாய்
களைப்பை நீக்கும் வலிமையை தந்தாய்

எல்லாமே என்னிடம் இருந்திருந்தால்
என்னிலை என்னால் அறிந்திருக்க மாட்டேன்

என்னிடம் எல்லாம் இருந்திருந்தால்
உன்னருள் நாடி நின்றிருக்க நினைத்திருக்க மறந்திருப்பேன்

தேவையானது அனைத்தும் இருந்திருந்தால்
முறையான நன்றியை முழுமையாக செய்திருக்காமல் இருந்திருப்பேன்

குறைவானதை தந்து
முறையாக தேட வைத்து
நிறைவாகப் பெற்று
குறைவற்ற நன்றியை
மனமுவப்ப தரச் செய்தாய்
--------------------------------------------

நான் வலிமை கேட்டேன் .........
இறைவன் எனக்கு சிரமங்களை கொடுத்து என்னை வலுவாக்கி அதனை சமாளிக்க வழி செய்தான்.

நான் அறிவு கேட்டேன் .........
இறைவன் எனக்கு பல சிக்கல்கள் கொடுத்து அதனைத் தீர்க்க முறை செய்தான்.

இறைவனிடம் வளமாக வாழ பொருளும் பணமும் கேட்டேன் .........
இறைவன் திறமை கொடுத்து வேண்டியதை தேடும் ஆற்றல் கொடுத்தான்..

ஆண்டவனிடம் தைரியமாக வாழ வழி கேட்டேன் .........
ஆனால் அல்லாஹ் எனக்கு ஆபத்து கொடுத்து அதனை சமாளிக்க அறிவைக் கொடுத்தான்.

நான் மக்களின் அன்பு கேட்டேன் .........
இறைவன் எனக்கு சிக்கலுக்குள்ளான மக்களை கொடுத்து அவர்களுக்கு உதவச் செய்து பாசமுண்டாக்கினான்

இறைவனிடம் நான் வளமான வாழ்வு பெற அவனது அருள் கேட்டேன் ...
ஆனால் அல்லாஹ் அதற்குரிய வாய்ப்புகளை கொடுத்து அதனைத் தேடி அடைந்துக் கொள் என்றான்.

நான் விரும்பிய எதுவும் கிடைக்க்கவில்லை
ஆனால் எனக்கு தேவையானது எல்லாம் பெற்றேன்

என் பிரார்த்தனை இறைவனால் வேறு வகையில் அங்கீகரிக்கப் பட்டதில் மகிழ்ந்தேன்
அல்ஹம்துளில்லாஹ் 

No comments:

Post a Comment