இன்றையே தினமே நம்மிடம் இருப்பது.
நேற்றைய தினம் தன்னுடைய நன்மை மற்றும் தீமையுடன் கடந்து விட்டது.
நாளைய தினமோ இன்னும் வந்தடையவில்லை.
இன்றைய தினத்தை உயர்வானதாக்கிக் கொள்வோம்.
இந்த நாளில் விழிப்பான மனதுடன் நாம் நமது கடமையை செய்வோம்
வண்டினம் ஆரவாரம் செய்து வருதலால்
அஞ்சி நடுங்கும் மனதை அறிந்த நாம்
நம் செயலின் விளைவால் தீமையாகிவிடுமோ
என அஞ்சி நடுங்கும் மனதை பெற்றிட வேண்டும்.
தீயின் வேகத்தை நீர் கொண்டு அடக்குதல் போல்
பெருமை கொண்ட மனதை
இறையின் நினைவு கொண்டு அடக்குதல் வேண்டும்
இன்றைய தினம் மகிழ்வாகவும், சாந்தியுடனும்
மனநிறைவுடன் இருப்போம்.
பறவைகள் போல்,
தேவையில்லாத கோபம், வருத்தம், வலி, பயம்
இவைகளை தூக்கிச் செல்வதை தவிர்ப்போம்
ஆகவே நான் உமக்குக் கொடுத்ததை (உறுதியாகப்) பிடித்துக் கொள்ளும்; (எனக்கு) நன்றி செலுத்துபவர்களில் (ஒருவராகவும்) இருப்பீராக”. (திருக்குர்ஆன் 7:144)
No comments:
Post a Comment