Saturday 15 February 2014

அது என்னுடையதுதான்


நான் விரும்புகிறேன் அதனால் அது என்னுடையது
நான் உன்னிடம் கொடுத்தேன் ஆனாலும் அது என்னுடையது

அது என்னிடம் உள்ளது அதனால் அது என் பொறுப்பில் உள்ளது
அதை உன்னிடம் கொடுத்துள்ளேன் அதனால் அது உன் பொறுப்பில் உள்ளது

நான் அதனை திரும்பவும் உன்னிடமிருந்து பெற்றுக் கொள்வேன்
நான் அதனை உன் பொறுப்பில் விட்டுச் சென்றதால்

அது என்னுடையதுதான்
அதை நாம் பொறுப்பாக பார்த்துக் கொண்டாலும்

நான் உன்னிடம் அமானிதமாக கொடுத்துள்ளேன்
நான் உன்னிடம் அமானிதமாக கொடுத்ததை பாதுகாப்பாக
நீ என்னிடம் ஒப்படைக்க வேண்டும் அது என்னுடையதாக இருப்பதால்

நான் நினைத்தபோது  சரியான நேரத்தில்
நான் அமானிதமாக ஒப்படைத்த பொருளை
நானே எடுத்துக் கொள்வேன்  உன்வசம் உள்ள என் அமானிதத்தை 


 'ஓர் அவையில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மக்களுக்கு அறிவுரை வழங்கிக் கொண்டிருந்தபோதுஅவர்களிடம் நாட்டுப் புறத்து அரபி ஒருவர் வந்தார். 'மறுமை நாள் எப்போது?' எனக் கேட்டார். நபி(ஸல்) அவர்கள் தங்களின் பேச்சைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள். அப்போது (அங்கிருந்த) மக்களில் சிலர் 'நபி(ஸல்) அவர்கள் அம்மனிதர் கூறியதைச் செவியுற்றார்கள்; எனினும் அவரின் இந்தக் கேள்வியை அவர்கள் விரும்பவில்லை' என்றனர். வேறு சிலர், 'அவர்கள் அம்மனிதர் கூறியதைச் செவியுறவில்லை' என்றனர். முடிவாக நபி(ஸல்) அவர்கள் தங்களின் பேச்சை முடித்துக் கொண்டு, 'மறுமை நாளைப் பற்றி (என்னிடம்) கேட்டவர் எங்கே?' என்று கேட்டார்கள். உடனே (கேட்டவர்)' இறைத்தூதர் அவர்களே! இதோ நானே' என்றார். அப்போது கூறினார்கள்.' அமானிதம் பாழ்படுத்தப்பட்டால் நீர் மறுமை நாளை எதிர் பார்க்கலாம்." அதற்கவர், 'அது எவ்வாறு பாழ் படுத்தப்படும்?' எனக் கேட்டதற்கு, 'எந்தக் காரியமாயினும் அது, தகுதியற்றவர்களிடம் ஒப்படைக்கப்பட்டால் நீர் மறுமை நாளை எதிர்பாரும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
- ஸஹீஹுல் புகாரி ஹதீஸ் 59.

No comments:

Post a Comment