Wednesday 12 February 2014

காதலிக்காமல் நாளில்லை காலமெல்லாம் காதலர் தினம்

நினைவெல்லாம் அம்மாவின் நினைவு
காலமெல்லாம் அம்மாவின் தினம்

காதலிக்காமல் நாளில்லை
காலமெல்லாம் காதலர் தினம்

வாழ்வெல்லாம் உழைக்கின்றேன்
வாழ்வெல்லாம் உழைப்பாளர் தினம்

காதலித்து மணமுடித்து தோல்வி கண்டவன் காதலர் தினத்தை வெறுக்கிறான்
காதலிக்காது மணமுடித்தவனும் காதலர் தினத்தை வெறுக்கிறான்
காதலித்து ஓடிப்போனவர் குடும்பத்தை சார்ந்தவரும் காதலர் தினத்தை வெறுக்கின்றனர்

காதல் பற்றிய கவிதை படிக்க வைக்கும்
காதல் பற்றிய படமும் கவர்ந்து இழுக்கும்
காதல் இல்லாத நாட்கள் இல்லை

காதல் தினம் பெயர் கொடுத்து கேளிக்கை செய்து
இளைஞர்களை கெடுத்து பொருள் ஈட்டும் தினம்தான் 'காதலர் தினம் '
பொருட்கள் இறக்குமதி செய்ததுபோல் 'காதலர் தினம் ' ஒரு இறக்குமதி

காதலி கிடைக்கவில்லை
மனைவி கிடைத்தாள்
மனைவியை காதலிக்கின்றேன்
மனைவியை இருக்கும் வரை காதலிப்பேன்
மனைவியை காதலிக்கும் நாளெல்லாம் காதலர் தினம்
மனைவி இல்லாத நாளெல்லாம் நாளாகுமா?
நான் வாழும் நாளெல்லாம் மனைவியின் நாள்தான்

2 comments:

  1. அன்பு மனதிற்கு என்றும் காதலர் தினம்...

    உங்களுக்கு உள்ளது...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. தங்களின் கருத்துரைக்காக :
    "எந்தெந்த உயிருக்கு எத்தெத்தனை சதவீதம் அன்பு செலுத்தணும்ன்னு ஒரு பட்டியலிருந்தால் ரொம்பச் சந்தோசம் !"

    எதற்கும் எனக்கு புரிவதற்கு இந்தப் பதிவுலே "உயிர்" என்றிருக்கும் இடத்திலெல்லாம் கடவுள் என்று மாற்றி வாசிக்கிறேன்...!

    http://dindiguldhanabalan.blogspot.com/2014/02/Love-Yourself.html

    ReplyDelete