Thursday 13 February 2014

நம்மைப்பற்றி நாமே அறிந்து கொள்ள முடியவில்லை!

நம்மைப்பற்றி நாமே அறிந்து கொள்ள முடியவில்லை
நாம் அடுத்தவர் பற்றி ஆய்வு செய்கிறோம்

நம் தவறை நாம் மறைக்கிறோம்
அடுத்தவர் தவறை விளம்பரம் செய்கிறோம்

நம்மோடு இருந்த மகன் நல்லவனாய் இருக்கிறான்
நல்லவனாய் நம்மோடு இருந்ததால் பெரிய மகிழ்வு கிட்டியதில்லை

நம் மகன் நம்மை விட்டு பிரிந்து கெட்டவனாக அலைந்து
நம் மகன் நல்லவனாக நம்மை வந்தடையும் போது பெரிய மகிழ்வு கிடைகிறது

உடனிருந்த உத்தம மகனுக்கு உயர் பொருளும் விருந்தும் கொடுக்கவில்லை
ஓடுகாலியாக (Prodigal Son) இருந்த நம் மகன் ஓடிப்போய் உத்தமனாக திரும்பி வர அரவணைத்து உயர் விருந்தும் சிறந்த பொருளும் கொடுத்து மகிழ்கின்றோம் .பிரிந்தவன் நல்லவனாக வந்து சேர்ந்தமையால்.

உடனிருந்த உத்தம மகனுக்கு, தமக்கு அந்த மரியாதை கிடைக்காமல் போனதால் மனம் வருந்த

உயர்ந்த உள்ளம் தாழ்வு மனப்பான்மையை அடைகின்றது

1 comment:

  1. இந்த ஓர வஞ்சனை தான் பலரை நாசமாக்குகிறது...

    ReplyDelete