Friday, 21 February 2014

தலைவன் இறைவன் (மட்டுமே

முழுமை இறைவனுக்கு மட்டும்
முழு புகழும் இறைவனுக்கு மட்டும்

அளவுகோல் இல்லை இறைவனை புகழ்வதில்
அளவுகோல் உண்டு மனிதனை புகழ்வதில்

மனிதனை புகழ்வதில் தவறில்லை
மனிதனை புகழ்வதில் உண்மை வேண்டும்

இல்லாததைப் புகழ்ந்து
வஞ்சகமாக வலை விரிக்க
வஞ்சகப் புகழ்ச்கி யாக்கி
கெட்டவனை மேலும் கெட வைக்க
வஞ்சக மனம் கொண்டோர் இயல்பு

புகழ்ந்தால் பிரியப் படுவார் யென
இல்லாததை இருப்பதாகப் புகழ
புகழப்படுபவர் புரிந்தக் கொள்வார்
புகழ்பவனைப் பற்றி

புகழ்ச்கியில் தடுமாறியவன்
புகழ்ச்கியையே நாடி நிற்பான்
அதிகாரத்தில் ஆணவன் கொள்வான்
அறிவுரைகளை புறம் தள்ளுவான்
அடுத்தவரை அடிமையாக நடத்துவான்

ஏமாற்றுபவர்களாகவும்
பொய்யர்களாகவும்
நாணயமற்றவர்களாகவும்
சுயநலமானவர்கலாகவும்
நயவஞ்சகர்களாகவும்
வீணர்களின் வெற்றுப் புகழ்ச்சி
மானிடரை மாற்றி விடும்

நயவஞ்சகமாக முகஸ்துதி
செய்பவன் முகத்தில்
மண்ணை வீசுமாறு
தங்களது தோழர்களுக்கு
நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.

"நிச்சயமாக அல்லாஹ் என்னை எந்த அந்தஸ்தில் படைத்துள்ளானோ அதைவிட மேலாக நீங்கள் என்னை உயர்த்துவதை நான் விரும்பவில்லை. நான் முஹம்மது இப்னு அப்துல்லாஹ், அல்லாஹ்வின் அடியாரும், அவனது தூதருமாவேன்” என்று கூறினார்கள். (ஹயாத்துஸ் ஸஹாபா

No comments:

Post a Comment