Saturday 1 February 2014

எதிரிக்கு எதிரி நண்பன்

நேற்று என் கொள்கைக்கு
மாற்றுக் கருத்து
இன்று எதிரி கொள்கைக்கு
மாற்றுக் கருத்து

உன் கருத்தை கேட்டேன்
என் கருத்துக்கு உடன்பாடு இல்லை
இன்று என் எதிரி கருத்துக்கு
மாற்று கருத்தை சொன்னாய்
நேற்று வரை நீ விரும்பத் தகாதவர்
இன்று என் எதிரி கருத்துக்கு
மாற்று கருத்தை சொன்னமையால்
என் நண்பனாய் உயர்வு பெற்றாய்

அதை ஓதாதே யென்றாய்
அதை ஓதுவது குற்றமா எனக் கூறி
ஓதுவதில் குற்றம் கண்ட  உன்னை
ஒதுக்கி வைத்தேன்

இன்று அதனை கேட்காதே
அந்த இடம் போகாதே என்று
அடம் பிடித்து அலறினாய்
உனது அலறல்
நான் நெடுநாள் விரும்பிய அலறல்.
உனது அலறல் என்னை
உன்னிடம் நெருங்க வைத்தது.
நாம் சேர்ந்து அலறுவோம்
நம் எதிரியை நசுக்க

நம் போரில் பாதிப்பு வரும்
ஓலமிட்டு ஒப்பாரி வைத்து
ஊரறிய மக்களை கூட்டி
ஒன்று கூடி எதிரியை
ஒழிக்க முற்படுவோம்
பார்ப்பவர் பார்க்கட்டும்
பார்த்தவர் பார்த்து சிரிக்கட்டும்

நம் செயல் நேர்மையோ! தவறோ!
நம் கொள்கை நம் எதிரியை
நாம் சேர்ந்து வீழ்த்த வேண்டும்.
மற்றவர் பார்த்து
நம்மையும் நம் எதிரியையும்
பார்த்து நகைக்க வேண்டும்

1 comment:

  1. தலைப்பைப் பொறுத்து சொன்னவை சரி...

    ReplyDelete