அம்மாவின் பாச கண்டிப்பு
பார்த்து போ
பார்த்து வா
கணடவனிடம் சேராதே
கண்டவனிடம் பேசாதே
கவனமாய் இரு
கவனமாய் படி
கண்டிப்பாய் வளர்த்தாள் அம்மா
கவனமாய் வளர்ந்தேன் அம்மா சொற்படி
சிறு வயதில் ஒரு தீங்கும் வரவில்லை
சிறு வயதில் ஒரு ஆபத்தும் வரவில்லை
சிறு வயதில் அம்மா பார்த்து வளர்த்ததால்
சிறு வயதில் அம்மா பொத்தி பொத்தி வளர்த்ததால்
இளைய வயதில்
சிறிய சறுக்கல்கள் பெறவில்லை
சிறிய காயங்கள் பெறவில்லை
சிறிய அனுபவங்கள் பெறவில்லை
வளர்ந்த பின்
பெரிய சறுக்கல்கள்
பெரிய காயங்கள்
பெரிய அனுபவங்களை
சிறிய வயதில் பெறாததால்
அம்மாவின் அன்பு
பெரிய அனுபவங்களை தவிர்த்து விட்டது
அம்மா என்னை என் போக்குக்கு
விளையாட விட்டிருக்க வேண்டும்
விளையாட்டில் சிறிய விபத்து நிகழ்ந்திருக்கும்
சிறிய விபத்தால் அனுபவன் பெற்று இருப்பேன்
பெரிய விபத்து வராமலிருக்க கற்று இருப்பேன்
பெரிய விபத்து நடக்காது - அம்மாவின் அன்பால்...
ReplyDelete