Wednesday, 12 February 2014

நற்செயல் கொண்ட மங்கை நாணம் மிகைத்து நின்றவள்

கல்யாணமாக நடந்தது
கடிமணமாக இருந்தது
கடிக்கும் மனமானது
மணந்தவள் மனம் நோக வாழ்ந்தமையால்

பிடித்தவள் பிடிக்காமல் போனாள்
பிடித்தவள் பிடிக்காமல் போனதால்
மணந்தவளோடு வாழும் வாழ்க்கை முறிந்து போனது

நட்புக்காக நாலு பேரை மனம் நாடியது
நட்பான நாலு பேரும் தீய வழியை காட்டினர்
தீய நட்பும் வேண்டாம்
தீய வழியும் வேண்டாமென நழுவினேன்

நல்லோர் வழி நாடினேன்
நல்லோர் காட்டிய வழி அறவழியானது
நல்வழி பிடிப்பை தந்தது
அல்வழி (தகாத வழி).அகல
நல்வழி பெற்றமையால்
நல்மனம் பெற்று
மனநிறைவு பெற்றது

நற்செயல் கொண்ட மங்கை
நாணம் மிகைத்து நின்றவள்
நல்லோர் அறவுரையோடு
இறைவழி நிறுத்தி
இல்லறம் தந்து இறை நிறைவோடு
இனிய வாழ்வை தொடரச் செய்தாள்

1 comment:

  1. /// தீய நட்பும் வேண்டாம்
    தீய வழியும் வேண்டாமென நழுவினேன்... ///

    இது தான் சிறந்த வழி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete