Wednesday 12 February 2014

விவாதம் செய்பவர் தகுதியற்றவரானால் விவாதம் விபரீதமாக முடியும்

விவாதம் செய்வதற்கு
விவரம் சேர்த்து விடு

விவரம் அறிந்தவருடன்
விவாதம் செய்ய நாடு

விவாதம் செய்பவர் தகுதியுடையவராய் இருக்கட்டும்
விவாதம் செய்பவர் தகுதியானவரானால்
தோல்வியும் வெற்றிதான் விவாதத்தில் பெற்ற அறிவினால்

விவாதம் செய்பவர் தகுதியற்றவரானால்
விவாதம் விபரீதமாக முடியும்

தகுதியுடையோரிடம் திறமையாய் வாதிடு
தகுதியற்றவரோடு விவாதம் செய்தால்
தகுதியற்றவராய் பார்பவருக்கு காட்சியளிப்பாய்
தகுதியற்றவர் யார் என விளங்காமல் போய்விடும்

1 comment:

  1. பல விவாதங்கள் விபரீதமாக முடியும் என்று தெரிந்திருந்தும் தொடர்வது தான் அதிக விபரீதம்...

    ReplyDelete