Thursday 6 February 2014

பாஸ்ட் புட் காலம்

பாஸ்ட் புட் காலம்
அவசரமாய் சமைத்து
அவசரமாய் உண்ண வேண்டும்
அவசரமாய் அலுவலகம் செல்ல வேண்டும்
அலுவலகத்தில் மெதுவாய் வேலை செய்ய வேண்டும்
அவசரமாய் வந்ததால் களைத்துப் போனதால்

பாஸ்ட் புட்டை
பாஸ்ட்டாக உண்டதால்
பாஸ்ட்டாக உயிர் போகும் நிலை

பாஸ்ட்டாக நகர வாழ்க்கை
பாஸ்ட்டாக வாகனம் ஒட்டுதல்
பாஸ்ட்டாக விபத்துகள் நேர்கின்றன 

பாஸ்ட் புட் காலம்
சிறிய வரிகள்
சின்ன கருத்துகள்
பெரிய விளக்கங்கள் தந்து விடும்

பெரிய கட்டுரைகள் படிக்க
போதுமான நேரமில்லை

1 comment:

  1. அப்படித்தான் ஆகி விட்டது... எவ்வித பயனுமில்லை...

    ReplyDelete