உர்மிளா உனை நான் அறிவேன்
உர்மிளா உயிராய் எனை நேசித்தாய்
உனது நேசம் ஒருதலைக் காதலானது
உனை பாடச் சொன்னால்
'அத்தான் அன்புள்ள அத்தான்' என்ற
கண்ணதாசன் எழுதிய பாடலை பாடினாய்
பாடலை பாட்டாக நினைத்தேன்
நேசத்தை பாசமாக கருதினேன்
மற்றவருக்கு விருப்பமுற்று
உனக்கு விருப்பமற்று
திருமணம் செய்விக்கப் பட்டாய்
உனது திருமணம் விவாகரத்தில் முடிந்தது
விரும்பாத மணமகனை உனக்கு முடித்தமையால்
உனது காதலை நான் அறியத் தவறினேன்
காதலின் அறிகுறியை அறியாத
தற்குறியாக நான் இருந்ததால்
No comments:
Post a Comment