Saturday 8 February 2014

ஆசைகள் நிறைவேற்றுப் பட்டு விட்டன

ஆசைகள் நிறைவேற்றுப் பட்டு விட்டன
ஆவியாகக் கூட இனியொரு முறை
இவ்வுலகம் வரமாட்டேன்
அவ்வுலக ஆசை அதிகமிருப்பதால்
அங்கேயே தங்கிவிடுவேன்

அவ்வுலக இடத்தை நிர்ணயிப்பவன்
அவனாக இருப்பதால்
இவ்வுலகில் நான் அனுபவித்த ஆசைகள்
அவன் அனுமதித்த ஆசைகளாகவே இருந்தன

இறைவனை தொழுதிடு அவன் படைத்ததர்க்காக
இறைவன் கொடுத்ததை மகிழ்வாக ஏற்றுக் கொள்
இறைவன் கொடுக்காமல் இருப்பதிலும் நன்மை இருக்கும்
இறைவனை தொழுதிடு உன் கடமையை செய்திடு

சுவனம் கிடைக்க காரணம் வைத்து இறைவனை தொழுதல் சிறப்பல்ல
நரகம் கிடைக்காமல் இருக்க இறைவனை தொழுவதும் உயர்வல்ல
படைப்பின் ஆற்றல் பெற்றவன் இறைவன்
படைத்தவனுக்கு எது கொடுக்க வேண்டுமென்பது தெரியும்
படைத்ததர்க்காகவே இறைவனை தொழுது ஆத்ம திருப்தி கொள்

1 comment:

  1. இது போல் தான் எண்ணம் வேண்டும்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete