Thursday 13 February 2014

கண்கள் கலங்க மற்றவர்களோடு பகிர்கிறாய்


நான் உதவி செய்தால் மகிழ்கிறாய்
நான் கண்டித்தால் வெறுக்கிறாய்

நான் செய்த உதவிகள் கணக்கிலடங்காதவை
நான் கண்டித்தவைகள் மிகச் சிலதே

உன் நினைவில் நிற்பது
நான் நல் நோக்கம் கொண்டு கண்டித்தவைகளே

நான் செய்த நல்லவைகளை
நீ மற்றவரிடம் சொல்வதில்லை

நான் கண்டித்தவைகளை
நீ கண்கள் கலங்க மற்றவர்களோடு பகிர்கிறாய்

உன் செயல் உனக்கே தீமை தரும் என்பதை நீ அறிவதில்லை
நான் செய்யும் நற்காரியங்களையும் குறைவு படுத்தி விடுகின்றது

நீ விரும்பிய அத்தனை பொருளையும் கொடுத்தேன்
நீ விரும்பிய ஒரு பொருள் கொடுக்காததால்
நீ விரும்பாத ஒரு பொருள் கொடுத்தமையால்
நான் உனக்கு விரும்பாதவனாகிவிட்டேன்

இது எனக்கு மட்டும் நடக்கிறதா ?
இது மற்றவருக்கும் நடக்கிறாதா !
எனபதவை அறிய விரும்பவில்லை
எனக்கு இதனால் மனம் மகிழவில்லை
என்பதை நான் அறிகின்றேன்

No comments:

Post a Comment