Thursday, 13 February 2014

உன்னோடு வருவது உன் செயலின் விளைவுகளே

கிடைத்தது கொஞ்சம்
கொஞ்சம் கிடைத்ததால்
அதனால் பங்கில்லை

கிடைத்தது நிறைவு
நிறைவை பகிர்ந்தால் குறைவாகிவிடும்
அதனால் பங்கில்லை

கிடைத்தது அதிகம்
அதிகமானது வாரிசுகளுக்கு மிஞ்சும்
அதனால் பங்கில்லை

கிடைத்தது எனக்கு
உனக்கு கொடுக்க மனமில்லை
அதனால் பங்கில்லை

கிடைத்த பாவங்கள் தானே வந்தது
கேட்காமலே கொடுக்க மனமுண்டு
அதனால் பங்குண்டு

மாண்ட பின்
கேட்டாலும் கிடைக்காது
நல்லோருக்கு கிடைத்த நன்மைகள்
இறைவன் எடை போடும் நிலையில்

உன்னோடு வருவது உன் செயலின் விளைவுகளே
உன்னோடு வருவது வேறொன்றுமில்லை

உயிரோடு இருக்கும்போதே
உயர்வான நன்மையை பெற்றிடு
சிறப்பானதை செய்து

No comments:

Post a Comment